'பெண் பஸ் கண்டக்டர்' மீது 'ஆசிட்' வீசிய 2 நபர்கள்.. அலறித் துடித்த பெண்!.. பதைபதைக்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூருவில் பெண் கண்டக்டர் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ள சம்பவம் தென்னிந்தியாவையே பதைபதைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

பெங்களூர் மெட்ரோ டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட பெங்களூர் அரசுப் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் 35 வயது பெண் இந்திரா பாய். 18 வருடங்களாக பணிபுரிந்து வரும் இந்திரா பாயின் கணவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திரா பாய் அன்றாடம் வேலைக்குச் செல்வது போலவே, நேற்று அதிகாலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி, தான் பணிபுரியும் பேருந்து பணிமனைக்கு நடந்து போய்க்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது பின்னாலேயே பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரின் கவனத்தைத் திருப்பி, அவர் மீது ஆசிட் வீசினர். 

இதனால் அலறித்துடித்துள்ளார் இந்திரா பாய். ஆசிட் வீசப்பட்டதில் அவரது முகம், கழுத்து பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்திரா பாய் வருவதற்காக காத்திருந்து, அந்த நபர்கள் ஆசிட் வீசியிருக்க வேண்டும் என்று சந்தேகித்த பீன்யா பகுதி காவல்துறையினர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BANGALORE, WOMENSAFETY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்