'தனியார்' மருத்துவமனையில் 'பணிபுரியும்' 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு 'கொரோனா'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உருவாகி, உலகம் முழுவதும் கடைவிரிக்கத் தொடங்கியது கொடூர கொரோனா வைரஸ். மருந்து மாத்திரைகள் எதுவும் இந்த கொடிய, புதிய வைரஸை எதிர்க்க உதவாததாலும், உருவாக்கப்படாததாலும், ஊரடங்கும், தனி மனித இடைவெளியும், சோப்பு போட்டு கைகழுவுதலுமே கண்முன் இருக்கும் தடுப்புமுறைகளாக உள்ளன.
ஆனால் மருத்துவர்களின் தியாகம் உலகளவில் பெரிதாக பார்க்கப்படுகிறது. தங்களுக்கு முறையான உபகரணங்கள் சரிவர கிடைக்கப்பெறாவிடினும், தொடர்ந்து சிகிச்சை அளித்துக்கொண்டும், கொரோனாவுக்கு எதிரான மனித போராட்டத்தின் முக்கிய வாரியர்களாகவும் மாறிப்போயுள்ளனர். இந்நிலையில் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே போல் தமிழகத்தில் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, அண்மையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பலரையும் வருத்தத்துக்குள்ளாகியதோடு, பலரின் கண்டனத்துக்கும் உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால் வந்த ப்ரஷரை'.. 'பிஹூ' டான்ஸ் ஆடி குறைக்கும் காவலர்கள்!.. களைகட்டிய 'கண்ட்ரோல் ரூம்!'.. வீடியோ!
- கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!
- 'கொரோனா வைரஸை அழிக்கும் இ-சானிடைசர்...' 'இதெல்லாம்' உள்ள வைக்கலாம்...! 'வெறும் 20 நிமிசத்துல அழிச்சிடும்...' மதுரை எஞ்சினியரின் கண்டுபிடிப்பு...!
- 'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க!'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்!.. என்ன நடந்தது தெரியுமா?
- இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'...
- 'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்
- ‘பிரசவம்’ முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு ‘கொரோனா’.. ‘நள்ளிரவு’ மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்..!
- டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பரபரப்பு!.. தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரம்!.. என்ன நடந்தது?
- நல்ல 'உணவு' குடுக்குற அளவுக்கு 'வருமானம்' இல்ல... என்னால 'முடிஞ்சது' இதுதான்!
- 'கைகொடுத்தது பிளாஸ்மா சிகிச்சை...' 'டெல்லியில்' குணமடைந்த '49 வயது' நபர்... 'இந்தியாவில் முதல் வெற்றி...'