இதுக்கு ஒரு ‘எண்டே’ இல்லையா..! இந்தியாவில் இருந்து ‘சீனாவுக்கு’ பறந்த விமானம்.. கடைசியில் பயணிகளுக்கு ‘காத்திருந்த’ அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வந்தே பாரத் விமானத்தில் சீனா சென்ற 19க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு சீனா சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனைஅடுத்து சீனாவில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வரவும், இந்தியாவில் உள்ளவர்கள் சீனாவுக்கு செல்லவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானம் சீனாவின் வுகான் நகரத்திற்கு சென்றது. இந்த விமானத்தில் 277 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். சீனா சென்றதும் அதில் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 39 பேர் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்த ஏர்-இந்தியா நிர்வாகம், டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கும் போது அனைவருக்கும் ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் அடுத்து செல்ல வேண்டிய விமானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்