புற்றுநோயால் அவதிப்பட்ட தந்தை.. கல்லீரல் பகுதியை தானமாக கொடுத்த 17 வயது மகள்.. நாட்டிலேயே இதுதான் முதல்முறை!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் (வயது 48). டீக்கடை ஒன்றை நடத்தி வரும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரஜினி பாலபிஷேகம் செய்யணும்ன்னு மயில்சாமி ஆசைப்பட்ட சிவன் கோவில்.. அவரு உருகி வழிபட்ட ஆலயத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா?

இதன் காரணமாக, பிரதீஷூக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். ஆனால், அதே வேளையில் பிரதீஷிற்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது.

அது மட்டுமில்லாமல், வறுமை மற்றும் மருத்துவ செலவு அதிகரிக்கும் என்ற சூழலில் அவரது குடும்பத்தினரும் பரிதவித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில், அவரது 17 வயது மகள் தேவானந்தா, தனது தந்தைக்காக கல்லீரலின் ஒரு பகுதியை தனமாக வழங்கவும் விருப்பம் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு நடுவே ஒரு சிக்கல் இருந்துள்ளது. இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் தான் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும். அப்படி இருக்கையில், இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தேவனாந்தா மனுதாக்கல் செய்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் உடல் உறுப்பை தானம் செய்ய அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, தேவானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது அவரது கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டறியப்பட்டது. அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்த தேவானந்தா, தன் உணவு பழக்கத்தை மாற்றி கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.

தொடர்ந்து, சுமார் ஒரு மாதத்தில் தேவானந்தாவின் கொழுப்பும் குறைந்த சூழலில், கல்லீரல் தானம் செய்யவும் அவர் தயாரானார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்ட சூழலில், தந்தை பிரதீஷ் மற்றும் மகள் தேவானந்தா ஆகியோர் உடல்நலம் தேறி வருகின்றனர். இதன் மூலம், நாட்டிலேயே முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்த 17 வயது சிறுமி என்ற பெருமையையும் தேவானந்தா பெற்றுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, தேவனாந்தாவின் செயலை பாராட்டி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சைக்கான செலவை தள்ளுபடி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது தந்தைக்காக 17 வயது மகள் செய்த காரியம், தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.

Also Read | "10 நாள் முன்னாடி பாக்குறப்போ மூச்சு எறைக்குதுன்னு சொன்னான்".. மயில்சாமி பத்தி மனோபாலா சொன்ன தகவல்!!

KERALA, GIRL, FATHER, YOUNGEST ORGAN DONOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்