'யாருக்கும் சந்தேகம் வந்திட கூடாதுன்னு...' கண்ணாடிக்கு பின்னாடி 'பாதாள' அறை அமைத்து...' 'உடைச்சு உள்ள போனப்போ...' - மிரண்டு போன போலீசார்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை தனியார் நடன பாரில் ஏசி, படுக்கை கொண்ட ரகசிய பாதாள அறைக்குள் வைத்து நடந்துவந்த குற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மும்பையின் அந்தேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 'தீபா டான்ஸ் பார்' என்ற தனியார் நடன பார் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்த நடன பாரில் கொரோனா தடையை மீறி செயல்பட்டதாகவும், மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை எனவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று போலீசில் புகார் அளித்துள்ளது.

அதோடு, அந்த புகாரில் பலவந்தமாக சில பெண்களை அடைத்து வைத்து நடனம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தீடிரென அந்த நடன பாருக்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீசாரை பார்த்த அதிர்ச்சியில் உறைந்த அங்கிருந்தவர்கள் சடசடவென ஓடினர். அதோடு, நீண்ட விசாரணையில் அந்த பாரில் சட்டவிரோதமாக நடனம் மற்றும் பாலியல் தொழில் நடப்பதற்கான அறிகுறிகளும் போலீசாருக்கு தென்படவில்லை.

இதனால் குழம்பிய போலீசார் பெண்கள் பயன்படுத்தும் ஒப்பனை அறைக்கு சென்று சோதனை செய்துள்ளனர் அங்கும் ஒரு துப்பும் துளங்கவில்லை. அதன்பின் அங்கிருந்த கண்ணாடி ஒன்று வழக்கத்தை விட அளவில் பெரியதாக இருந்ததை கவனித்த போலீசார் அதை அகற்ற முயன்றுள்ளனர்.

அதன் பின் பல முயற்சிகளுக்கு பின் அந்த கண்ணாடியை உடைத்து பார்த்த போது தான் ஹாலிவுட் படங்களில் வருவதை போல ஒரு பங்களவையே கட்டி வைத்துள்ளனர். அந்த பிரம்மாண்ட பாதாள அறையில் ஏசி, படுக்கை வசதி அமைக்கப்பட்டு இருந்ததோடு, நடனமாடும் பெண்களையும் மறைத்து வைத்துள்ளனர்.

அந்த அறையில் ஒருவர் பின் ஒருவராக சுமார் 17 பெண்கள் வெளிவந்து போலீசாரையே மிரள வைத்துள்ளனர். நடன பாரில் பாதாள அறையை உருவாக்கி பெண்களே ரகசியமாக பதுக்கி வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்திற்காக தீபா நடன பார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், மீட்கப்பட்ட பெண்கள் அனைவரையும் காப்பகத்துக்கு அனுப்பிய போலீசார், நடன பாரின் மேலாளர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

UNDERGROUND CELLAR, MUMBAI, 17 GIRLS, BAR, பாதாள அறை, மும்பை, கண்ணாடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்