15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு.. கொரோனா தடுப்பூசி செலுத்த கோவின் தளத்தில் பதிவு தொடக்கம்
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுடெல்லி : 15 முதல் 18 வயதுக்குட்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள கோவின் தளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துவருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10-ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
கோவின் தளம்:
இதன்படி 15 வயது முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் தளத்தில் இன்று முதல் தங்கள் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்யலாம். 2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்கள். இவர்கள் கோவின் தளத்திலும் பதிவு செய்யலாம் அல்லது நேரடியாகவும் தடுப்பூசி மையத்துக்குச் சென்று பதிவிடலாம்.
இன்று முதல் பதிவு:
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவில் “ அனைத்து தகுதியான மக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்த தயாராகுங்கள். 15 முதல் 18 வயதுள்ளவர்கள் கோவின் தளத்தில் 2022, ஜனவரி 1-ம்தேதி முதல் தங்களைப் பதிவு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளது.
15 முதல் 18 வயதுள்ள பிரிவினர் அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படஉள்ளதால், பல்வேறு மாநிலங்களுக்கும் தேவையான அளவு மருந்து மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
30 நிமிடங்கள் கண்காணிப்பு:
15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு முதன் முதலில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால் தடுப்பூசி செலுத்தியபின் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள். முதல் டோஸ் செலுத்திய 28 நாட்களுக்குப்பின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும்.
15 முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தத் தனியாக தடுப்பூசி மையத்தை உருவாக்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒமைக்ரான் தொற்று லேசானது தான்.. பெருசா ஆக்சிஜன் தேவை இருக்காது.. அறிவுறுத்திய எய்ம்ஸ் இயக்குனர்
- வேகம் எடுக்கும் கொரோனா.. நெருக்கடியில் சென்னை.. தனிமைப்படுத்தப்படும் தெருக்கள்
- சவுரவ் கங்குலிக்கு கொரோனா.. திரைப்பட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாரா??.. புதிய தகவலால் மேலும் பரபரப்பு
- டெல்டா வகையை விட ‘ஒமைக்ரான்’ அதிக பாதிப்பு ஏற்படுத்துமா..? இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் வெளியான ‘புதிய’ தகவல்..!
- புது கொரோனா ரகங்கள்: 6 மாசத்துக்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி போட்டுகிட்டு வாழ்ற நிலை வரலாம்..!
- 'பூஸ்டர்' டோஸ்களால் 'கொரோனாவ' கட்டுப்படுத்த முடியுமா...? - WHO இயக்குனர் அளித்த பதில்...!
- மறுபடியும் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா.. ‘140 பேர் பலி’.. விழி பிதுங்கி நிற்கும் நாடு..!
- அச்சுறுத்தும் ஓமிக்ரோன்.. ‘ஆதாரம் கிடைச்சிருக்கு’.. தடுப்பூசி போட்டவங்களும் எச்சரிக்கையாக இருக்கணும்.. WHO தலைவர் முக்கிய தகவல்..!
- 'இந்திய' அழகிக்கு 'கொரோனா'.. தள்ளிப் போன 'உலக' அழகி போட்டி!!
- ஓமிக்ரோன் பாதித்த நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி.. சுகாதாரத்துறை செயலாளர்..!