மூணு வருஷம் 'கழிச்சு' வந்த பையன்... 'அம்மா - அப்பா'க்கு ஹேப்பி... ஆனாலும் காத்திருந்த 'பயங்கரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேசத்தை சேர்ந்த உதய் என்னும் சிறுவன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தனக்கு 12 வயது இருக்கும் போது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு சென்றுள்ளான்.
மூன்று வருடமாக டெல்லியில் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்த சிறுவன், ஊரடங்கின் காரணமாக வேலையில்லாமல் தவித்து வந்துள்ளான். குடும்ப நினைவுகள் எட்டிப் பார்க்க வருமானமும் இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்கு செல்ல சிறுவன் முடிவெடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு நடந்து சென்ற நிலையில் அச்சிறுவனும் அவர்களுடன் நடந்து தனது சொந்த ஊர் வந்தடைந்துள்ளான். மத்தியப்பிரதேசத்திலுள்ள சிறிய கிராமம் ஒன்றில் தான் சிறுவனின் பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர். சொந்த ஊர் வந்த சிறுவனைக் கண்ட பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் உதய் வீட்டை விட்டு வெளியேறிய போது அவனது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, உதய் மாயமான சில நாட்கள் கழித்து காட்டுப்பகுதியில் சிறுவனின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தில் இருந்த உடையும், உதய் அணிந்திருந்த உடையும் ஒன்றாக இருந்ததால் அது உதய் தான் என கூறி அந்த சிறுவனின் குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர்.
இதன் காரணமாக தான் மூன்று வருடங்கள் கழித்து வந்த சிறுவனை கண்டதும் ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன் திரும்பியுள்ளதால் சிறுவனின் பெற்றோர்கள் திக்குமுக்காடி போயுள்ள அதே வேளையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் புதைத்த சிறுவன் யார் என்பது குறித்த விசாரணையை போலீசார் மீண்டும் தொடங்கியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சரக்கு ரயில் ஏறி 17 பேர் பலி...' 'தண்டவாளத்துல அசந்து தூங்கிட்டு இருந்தப்போ...' இந்தியாவை உலுக்கிய அடுத்த கோர நிகழ்வு...!
- இன்று 'ஒரேநாளில்' மட்டும் '841' பேர்... 15 ஆயிரத்தை கடந்தது 'பாதிப்பு' எண்ணிக்கை!
- "இனிமே சரிப்பட்டு வராது"... "பஸ், ட்ரெயின நம்பி பிரயோஜனமில்ல"... நீட்டித்த 'ஊரடங்கு'... 'சைக்கிளில்' ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்!
- 'மகாராஷ்டிரா' டூ 'தமிழகம்' ... 'ஏழு நாட்கள்' ... 'ஆயிரம் கிலோமீட்டர் நடை' ... தமிழக இளைஞர்களின் வேதனைப்பயணம்!
- இங்க வாங்க, அடிக்க எல்லாம் மாட்டேன், வாங்க ... பொது இடங்களில் சுற்றி திரிந்த மக்களுக்கு ... போலீசாரின் நூதன தண்டனை!