அசைஞ்சுக்கிட்டே இருந்த சீட்.. கீழ இறங்கி பார்த்ததும் தெறிச்சு ஓடிய டிரைவர்.. ஆத்தாடி.. இதுல உக்காந்தா இவ்ளோ தூரம் வந்தாரு..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீட்டுக்கு கீழே மலைப்பாம்பு இருப்பதை அறியாமல் லாரியை வெகுதூரம் ஒட்டிச் சென்றிருக்கிறார் டிரைவர் ஒருவர்.

Advertising
>
Advertising

Also Read | "ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைக்கிறோம்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க".. அமெரிக்காவில் மரணமடைந்த மகள்.. இந்தியாவில் மன்றாடும் பெற்றோர்..!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். எதிர்பாராத வேளையில் பாம்பை பார்க்க நேரிட்டால் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மை விட்டு அகலவே சில மணி நேரங்கள் தேவைப்படும். அப்படி இருக்கையில் லாரி ஓட்டுநர் ஒருவர் மலைப்பாம்பின் மீது அமர்ந்து பல கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார். விபரம் தெரிந்தவுடன் அவருக்கு மூச்சே நின்றுவிடுவது போல இருந்திருக்கிறது.

லாரி டிரைவர்

மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு உத்திர பிரதேச மாநிலத்தின் பதேபூர் பகுதிக்கு சென்றிருக்கிறார் டிரைவர் ஒருவர். அப்போது அவருடைய இருக்கை அசைந்துகொண்டே இருந்திருக்கிறது. வண்டி ஓட்டும் ஆர்வத்தில் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர் பயணத்தை தொடர்ந்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு பசி எடுக்கவே, உணவகம் ஒன்றில் லாரியை நிறுத்திவிட்டு சாயப்பிட சென்றிருக்கிறார்.

சாப்பிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என நினைத்த அவர், லாரியில் ஏறியுள்ளார். அப்போது, சீட் அசைந்துகொண்டே இருந்தது நியாபகம் வரவே, சீட்டின் கீழே பார்த்திருக்கிறார். அப்போது உள்ளே பிரம்மாண்ட மலைப்பாம்பு இருப்பதை பார்த்த அவர் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

மலைப்பாம்பு

இதனையடுத்து உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்த அவர், அங்கு இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். டிரைவர் சத்தம் போடுவதை கண்ட மக்கள் உடனடியாக ஓடிச்சென்று பார்த்தபோது அவர்களும் திகைத்துப் போயிருக்கிறார்கள். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைந்துவந்த அதிகாரிகள் லாரி சீட்டின் கீழே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 15 நீளம் இருந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய அந்த டிரைவர்,"நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மலைப்பாம்பு மேலே அமர்ந்து இவ்வளவு தூரம் பயணித்ததை நினைத்தால் எனக்கு திகைப்பாக இருக்கிறது" என்றார்.

Also Read | "அவங்கள மாதிரி மாறனும்".. ரூ.48 லட்சம் செலவுல 15 ஆபரேஷன் செய்துகொண்ட இளம்பெண்.. ஆனா இப்போ இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சாம்..!

TRAVELS, PYTHON, TRUCK, MADHYA PRADESH, UTTARPRADESH, TRUCK DRIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்