'யானையை கொல்லும் ஒரு துளி விஷம்'... 'ஊரடங்கால் அசால்ட்டா என்ட்ரி கொடுத்த ராஜநாகம்'... தெறித்து ஓடிய மக்கள்'... திக் திக் நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த பாம்பைக் கண்டால் படை மட்டுமல்ல, யானை கூட நடுங்கும். தான் ராஜநாகம். மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அடர்ந்த வனப் பகுதியில் மட்டுமே வாழும் இந்த ராஜநாகம் உலகிலேயே கொடிய விஷம் கொண்ட பாம்பு வகைகளில் ஒன்றாகும். காடுகளில் அழித்தல் மற்றும் காலநிலை மாறுபாடு போன்ற காரணங்களால் அவ்வப்போது ஊருக்குள் ராஜநாகங்கள் புகுந்து விடுகிறது.

Advertising
Advertising

அந்த வகையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் நடமாட்டம் என்பது குறைவாகவே உள்ளது. இதன்காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வந்த நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்தன. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் செருக்குப்பள்ளி வனப்பகுதி என்பது, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இந்த வனப்பகுதியை ஒட்டி விசாகப்பட்டின மாவட்டத்தில் தம்மடப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. அங்கு 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென புகுந்து விட்டது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் பாம்பு பிடி வீரர் ஒருவருடன் பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். 15 அடி நீளம் என்பதால் பாம்பைப் பிடிப்பதில் சிக்கல் நிலவியது. அது மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்பட்டதால், நொடிக்கு நொடி பதற்றம் தொற்றிக் கொண்டது. இறுதியில் பாம்பைப் பிடித்த பின்பு தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். பின்பு ராஜநாகம் அடர்ந்த செருக்குப்பள்ளி வனப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்