'14 பேரை காவு வாங்கிய டெண்ட்'.. திடீரென நடந்த கோர விபத்தால் ஏற்பட்ட சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த கதாகாலட்சேபத்தின் போது, பந்தல் சரிந்து விழுந்ததில், 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள துக்க நிகழ்வு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ளது ஜசோல் கிராமம். இங்குள்ள பள்ளி ஒன்றில்  ராமாயணத்தை கதையாகச் சொல்லக்கூடிய கதாகாலட்சேபம் என்கிற நிகழ்வு நடந்தது. மாலை 5 மணிக்கு நிகழ்ந்த இந்த நிகழ்வின்போது திடீரென பந்தலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததை அடுத்து, இருந்த இரும்பு உத்திரங்களும் சரிந்தன.

உடனே அங்கிருந்த மக்கள் பயத்தில் தப்பியோட முயன்றபோது, ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டபடி, ஓடியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் இவ்விபத்தில் பரிதாபமாக பலியான 14 பேரின் சடலங்களையும் மீட்டனர். 21 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, துரதிர்ஷ்டமான இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறியுள்ளார். மேலும், பலியானவர்களுக்காக வருந்துவதாகவும், அவர்களின் ஆன்மா தன்னிரக்கம் பெற இறைவனிடத்தில் பிரார்த்திப்பதாகவும், அவர்கள் அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்