'அண்ணன் கூட விளையாடலாம்னு தானே'...'என் பொண்ண கூட்டிட்டு போன'... சிறுவனின் வெறிச் செயல்!
முகப்பு > செய்திகள் > இந்தியா4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் சங்கத் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுமியை, விளையாட அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பேசிய சிறுமியின் தயார் '' அண்ணன் கூட விளையாட வா' என்று எனது மகளை அந்த சிறுவன் அழைத்து சென்றுள்ளான்.
ஆனால் வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால், அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியவர, அந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை ஹரியாணாவில் உள்ள டப்வாலி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது, அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ப்ரண்ட்னு நம்பி வந்ததுக்கா இந்த நிலைமை’.. ரயில் தண்டவாளத்தில் தரதரவென இழுத்து.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- 'நான் மயக்கத்துல இருந்தேன்'...'சென்னையின் பிரபல மருத்துவமனையில்'...'பெண்ணிற்கு' நேர்ந்த கொடூரம்!
- ‘அவனுக்கு இன்னைக்கு பொறந்த நாளுங்க’.. ‘3 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவிக்கும் 2 வயது குழந்தை’ மனதை உருக்கும் சம்பவம்!
- 'சிவப்பு கலர் பைக், ஹெல்மெட், மிரளவைத்த சீரியல் கில்லர்... 'மதியம் தனியாக இருக்கும் பெண்கள்தான் டார்கெட்'!
- '14 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநர்'!
- 'தனியாக வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை'... 'வங்கி கிளை மேலாளர் அத்துமீறல்'!
- 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவரான உறவினரே துன்புறுத்திய கொடூரம்!
- செல்போன் மூலம் பாலியல் தொல்லை.. முதியவரை அடித்து உதைத்த மக்கள்!
- ‘அப்போ சிறுமிகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கும் ஆடைதான் காரணமா?’.. பெண்மணியின் செயலுக்கு இளம் பெண்கள் பதிலடி.. பரபரப்பு வீடியோ!
- '13 வயசு பிள்ளைய கெடுத்துட்டேன்'...'எந்த பெண்ணையும் தொடமாட்டேன்'...இளைஞர் கதறும் வீடியோ!