‘12 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு சிறுமி செய்த காரியம்..!’ பெருமையில் பெற்றோர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் சூரத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் துறவறம் மேற்கொள்ள இருக்கிறார்.

குஷி என்ற அந்த சிறுமி இதுபற்றிப் பேசும்போது, “இந்த உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் யாவும் நிலையானவை அல்ல. அமைதியையும் முக்தியையும் அடைய எளிமையான வாழ்வே ஒரே தீர்வு. என் குடும்பத்திலேயே இதேபோல 4 பேர் துறவறம் ஏற்றதைப் பார்த்திருக்கிறேன். சிமந்தர் சுவாமிஜி கூறியுள்ளபடி ஒருவர் 8 வயதில் உலக இன்பங்களைத் துறக்க வேண்டும். இப்போது எனக்கு 12 வயதாகிவிட்டது. அதனால் நான் தீக்‌ஷை பெற விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

அரசு ஊழியரான குஷியின் தந்தை வினித் ஷா, “என் மகளுக்கு இளம் வயதில் இப்படி ஒரு உள்ளார்ந்த பார்வை வந்ததில் மகிழ்ச்சி. எல்லா குழந்தைகளுக்கும் இது சாதாரணமாகத் தோன்றாது. இது எங்களுக்குப் பெருமையான விஷயம். இனிமேல் அவர் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒளியைக் காட்டுவார்” எனக் கூறியுள்ளார்.

குஷியின் தாய், “என் மகள் மருத்துவராக வேண்டுமென நினைத்தேன். ஆனால் அவர் துறவறத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது அதிக பெருமையைத் தருகிறது” எனக் கூறியுள்ளார். 6ஆம் வகுப்பில் 97% மதிப்பெண் பெற்ற குஷி துறவறத்திற்காக பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார்.

SURAT, GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்