'எக்ஸ்ரே எடுத்து பார்த்தப்போ...' 'ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல மொத்தம் 11 இருந்துச்சு...' 'குழந்தையின் உடலைக் கண்டு அதிர்ந்து போன மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானாவைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையின் உடலில் 11 ஊசிகள் சிக்கியிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வனபர்த்தி மாவட்டத்தை சேர்ந்த அசோக் மற்றும் அன்னபூர்ணா தம்பதியரின் மூன்று வயது மகன் லோக்னாத். நீண்ட நாட்களாக சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுவனுக்கு எக்ஸ்ரே மூலம் உடல் பரிசோதிக்கப்பட்டது. எக்ஸ்ரே அறிக்கையை மருத்துவர்கள் பார்த்தபோது அதிர்ந்து போயினர். சிறுவனின் உடலில் சிறுநீரகத்திற்கு அருகிலும், ஆசனவாயிலிலுக்கு மேல்பக்கமாகவும் ஊசிகள் இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஊசிகளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுவனின் உடலில் மொத்தம் 11 ஊசிகள் இருந்ததாகவும், அதில் எட்டு ஊசிகள் மட்டுமே அகற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள மூன்று ஊசிகளும் உடலின் முக்கிய பாகங்களில் சிக்கிக் கொண்டிருப்பதால் அதை அகற்றுவதில் சிக்கல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை அடிக்கடி அழைத்து செல்லும் இரு நபர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறை, அவர்களை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...
- ‘உடம்பில் 20 கத்திக்குத்து’.. ‘குப்பைத்தொட்டியில் இருந்து கவ்விச் சென்ற நாய்’.. பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!
- ‘கூட தூங்கின குழந்தைய காணோம்’... முன்னுக்குப் பின் ‘முரணாக’ பதிலளித்த ‘தாய்’ கொடுத்த ‘உறையவைக்கும்’ வாக்குமூலம்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ சம்பவம்...
- ‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’.. பதறி ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்.. 3 வயது குழந்தைக்கு தாயின் கணவரால் நடந்த கொடூரம்..!
- போதை ‘வெறியில்’... மொத்த ‘குடும்பத்திற்கும்’ ஒரே ‘நாளில்’ நேர்ந்த பயங்கரம்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...
- VIDEO: ‘குழந்தை உயிர காப்பாத்தணும்’.. 400 கிமீ தூரம், மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்.. பரபரப்பு நிமிடங்கள்..!
- ‘ஒரு வயசு’ கூட ஆகாத மகனுக்கு... ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்!’... மகிழ்ச்சியின் ‘உச்சத்தில்’ தந்தை...
- 'பெத்த வயிறு துடிக்குதே'... 'தண்ணீர் தொட்டியில் நடந்த கொடூரம்'... மனைவி கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
- 'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...
- 'நிச்சயமா இது கடவுளின் குழந்தை தான்'... மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட 'அதிசய நிகழ்வு'!