ஒட்டுமொத்த இந்தியாவிலும்... இந்த '11 பகுதிகளில்' மட்டும்... கொரோனா பாதிப்பு 'ரொம்பவே' அதிகம்... நம்ம ஊரு 'லிஸ்ட்ல' இருக்கா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொடிய தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் மூலம் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானை பின்னுக்கு தள்ளி இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை இந்தியாவில் 1,38,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 11 நகராட்சி பகுதிகளில் மட்டும் 70 சதவீதம் பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் இந்தியளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக சுமார் 50,000 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில் இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் நாள்தோறும் சராசரியாக 700 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னையில் மட்டும் 500 பேர் பாதிப்படைந்து வருகின்றனர்.
அதே வேளையில், கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 41 சதவீதம் (57,721) பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இந்த நேரத்துல மட்டும் வெளில வந்துராதீங்க.. அடுத்த 5 நாளைக்கு வெயில் மண்டையை பிளந்துரும்!”.. 8 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
- 'ஐ.டி. ஊழியர்கள் ஜாக்கிரதை...' 'பணி நீக்க' அறிவிப்பை வெளியிட்ட 'நிறுவனம்...' 'எத்தனை பேர் நீக்கப்படுவார்கள்?...' 'வெளியேற்றப்படப் போவது யார்...?'
- "நம்ம நாட்டுக்கு எப்பதான் போவோம்?".. காத்திருந்த 'வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டைதாரர்களின்' நெஞ்சை குளிரவைத்த இந்தியா!
- "16 நாடுகள்ல பாத்துட்டோம்.. 'இந்த' மாறி 2022 வரைக்கும் பண்ணுங்க!".. புதிய லாக் டவுன் திட்டம் ஆலோசனை!.. ஆய்வாளர்கள் பரபரப்பு கருத்து!
- பேருந்தை பிடிக்க 'இறங்கிய' சிறுமிக்கு... நொடியில் 'நடந்த' பரிதாபம்!
- "13.5 கோடி இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்!".. "இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்!".. 'வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிக்கை'!
- இந்தியாவில் 5 லட்சம் பேர் ‘இதுக்காக’ காத்திருக்காங்க.. எல்லாத்துக்கும் காரணம் ‘கொரோனா’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- "சீனாவை முந்திட்டோமா...?" "என்ன சார் சொல்றிங்க..." "எதுல முந்திட்டோம்...?"
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- 'சீனாவுக்கு' எதிராக '18 அம்சத் திட்டம்...' 'அமெரிக்காவுடன்' கை கோர்க்கும் 'இந்தியா...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்...'