"இந்தியா சுதந்திரம் வாங்குறதுக்கு சரியா 3 நாள் முன்னாடி.." 109 வயது முதியவர் சொன்ன 'பரபரப்பு' தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா சுதந்திரம் அடைந்து, சமீபத்தில் 75 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்த இந்திய நாடு, பின்னர் பல்வேறு தியாகிகள், வீரர்கள் மற்றும் பெரும் தலைவர்கள் காரணமாக, கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருந்தது.

Advertising
>
Advertising

இதற்கு பின்னர் ஏராளமான வலிகளும், பலரின் உயிர் தியாகங்களும், பல்வேறு போராட்டங்களும் தான் சுதந்திர காற்றை நாம் சுவாசிக்கும் வாய்ப்பை இன்று உருவாக்கி கொடுத்துள்ளது.

இதன் பின்னால் உள்ள வீரர்கள் மற்றும் தியாகிகள் கதைகள், பலரையும் மெய்சிலிர்க்கவும், மனம் உடையவும் வைக்கும்.

அந்த வகையில், தற்போது 108 வயதாகும் Imamuddin Qureshi என்பவர், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுதந்திரம் குறித்த பேச்சு வரும் போது எல்லாம், இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் உள்ள நினைவுகளில் இமாமுதீன் மூழ்கி விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இமாமுதீன் 'India Today'-க்கு தெரிவித்துள்ள தகவலின் படி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியா சுதந்திரம் அடைய போவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக இருந்ததாக இமாமுதீன் தெரிவித்துள்ளார். மேலும், மூவர்ண கொடிகளுடன் தெரு எங்கும் பேரணிகளையும் மக்கள் நடத்தி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமயத்தில், இதனைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், இந்திய மக்கள் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று, பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரை இமாமுதீன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. பல முறை கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து இமாமுதீன் தப்பித்தும் சென்று விட்டார். இதன் பின்னர், அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததால், இமாமுதீனால் வீட்டுக்கு திரும்ப முடிந்தது.

சுதந்திரம் கிடைக்க இருந்த சமயத்தில், மிகவும் தைரியமாக பிரிட்டிஷ் அதிகாரி கன்னத்தில் இமாமுதீன் அறைந்த சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

AUGUST 15, 1947, INDEPENDENCE DAY, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்