"என்ன இவ்ளோ இருக்கு?".. 3 வருசமா வயிற்று வலி & மஞ்சள் காமாலைன்னு ஹாஸ்பிடலுக்கு ஓடிய நபர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு அடிக்கடி மருத்துவமனை சென்று வந்த நபரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட விஷயம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட விஷயங்களால் கடும் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, அந்த நபரும் அடிக்கடி மருத்துவமனை சென்று அங்கே அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

முதலில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையிலும் அந்த நபர் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அங்கே அவரை பரிசோதித்து பார்த்த போது தான் கடும் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது. அவரது வயிற்றிற்குள் வேர்க்கடலை முதல் எலுமிச்சை பழம் வரை உள்ள அளவிலான 1000 க்கும் மேற்பட்ட கற்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பித்தம் உள்ளிட்ட விஷயங்களால் உருவான இந்த கற்களின் காரணமாக, அந்த நோயாளிக்கு பித்த நாள அழற்சியும் உருவானதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கற்களை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர், சுமார் 250 கிராம் எடையுள்ள 1000 கற்கள் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே போல, இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், நோயாளியும் மருத்துவமனையில் ஐந்து நாட்கள் சிகிச்சை முடிந்ததுடன் பூரணமாக குணமடைந்தும் வீடு திரும்பி உள்ளதாக சொல்லப்படுகிறது. 3 வருடமாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்த நபருக்கு உருவாகி இருந்த சிக்கல் தொடர்பான செய்தி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

STOMACH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்