'இருந்ததே 10 நிமிஷம்தான்'.. ஹாலிவுட் க்ளைமேக்ஸ் பாணியில்.. மிரண்டுபோன பயணிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனியார் விமானம் ஒன்று குறைவான எரிபொருளுடன் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து டெல்லிக்கு சுமார் 153 பயணிகளுடன் தனியார் விமானம் ஒன்று சென்றுள்ளது. அப்போது மோசமான வானிலை நிலவியதால் விமானத்தை லக்னோவில் தரையிறக்க விமானக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் விமானத்தில் எரிபொருளின் அளவு குறைவாக இருப்பதாக விமானி ஒரு அதிர்ச்சித் தகவலை அளித்திருக்கிறார்.

இதனால் பதறிப்போன விமானக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக வான்வெளியின் டிராஃபிக்கை க்ளியர் செய்து அவசரமாக அந்த விமானத்தை லக்னோவில் தரையிறக்க உதவியுள்ளனர். இதனை அடுத்து விமானத்தின் எரிபொருள் அளவு குறித்து சோதனை செய்து பார்த்ததில் 300 கிலோ பெட்ரோல் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த அளவுள்ள எரிபொருளை வைத்துக்கொண்டு வானில் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே வட்டமடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை வானிலை காரணமாக, விமானத்தை சில நிமிடங்கள் வானில் வட்டமடிக்க சொல்லியிருந்தாலோ அல்லது அருகில் இருக்கும் மற்றொரு விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலோ பெரும் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து குறைவான எரிபொருளுடன் விமானத்தை இயக்கிய விமானிகளிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FLIGHT, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்