நடிகை நக்மாவின் அக்கவுண்டில் இருந்து மாயமான 1 லட்ச ரூபாய்?.. அடுத்தடுத்து குவிந்த 80 புகார்கள்.. எச்சரிக்கும் போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகையும் அரசியல் பிரமுகருமான நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாய் மாயமானதாகவும் இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

மோசடி

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இணையத்தின் வீச்சும், சமூக வலை தளங்களின் வருகையும் பல கொடைகளை மானுட குலத்திற்கு அளித்திருக்கிறது. இதன் மூலம், நம்முடைய தகவலை நொடிப்பொழுதில் உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க முடிகிறது. ஆனாலும், இதனை பயன்படுத்தி தீய காரியங்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பிறரது தகவல்களை திருடுவது, அக்கவுண்ட்டை ஹேக் செய்து பணம் பறிப்பது என புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர் இந்த மோசடி கும்பல்கள். 

 Images are subject to © copyright to their respective owners.

நடிகை நக்மா

தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நக்மா. அதனை தொடர்ந்து  பாட்சா, ரகசியப் போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள நக்மாவிற்கு சமீபத்தில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் அனுப்பப்பட்ட அந்த மெசேஜை நக்மா ஓபன் செய்துள்ளார். அப்போது அவருக்கு போன்கால் வந்திருக்கிறது.

அதிர்ச்சி

அப்போது, வங்கி மேனேஜர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் KYC முடிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. பேசிக்கொண்டிருக்கும்போதே அவருடைய வங்கி கணக்கில் இருந்து 99,998 ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த நக்மா இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி நக்மா தனது புகாரில் மெசேஜில் கேட்கப்பட்ட எவ்வித விவரங்களையும் தான் பகிரவில்லை எனவும் போன் கால் பேசும்போது 20 ஒடிபி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், இதேபோலவே 80 க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்திருப்பதாக புகார் அளித்திருப்பதாகவும் மக்கள் முன்பின் தெரியாத எண்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதனை திறக்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்திருக்கின்றனர்.

NAGMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்