‘என்ன ஒரு புத்திசாலித்தனம்’.. அடுத்த 1 வருசத்துக்கு உண்டான காய்கறிகளை நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்துப் போடுவது என்பது, அதையும் தினமும் செய்வதென்பது ஒரு தொடர்வேலை. இதனைச் செய்வதனால் தினம் உழைக்க வேண்டியுள்ளது.

தவிர நாளில் பாதி நேரத்தை இதற்கே கொடுத்துவிட வேண்டியுள்ளது. மீதி நேரத்தில் அயர்ச்சி உண்டாகிவிடுகிறது. இதனால் காய்கறி வெட்டும் தினசரி கஷ்டத்தில் இருந்து விடுபடும் விதமாக ஆஸ்திரேலிய பெண்மணி ஒருவர் நூதனமான காரியம் ஒன்றைச் செய்துள்ளார்.

அதன்படி, ஒரு வருடத்துக்கு தேவையான காய்கறிகளை வெறும் அரைநாளில் வெட்டி, அவற்றை அடுத்து ஒருவருடத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ள இந்த பெண்மணியின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

இதில் 15 கிலோ கேரட், 20 கிலோ உருளைக் கிழங்கு, 10 கிலோ தக்காளி என்று நம்மூர் பணமதிப்புக்கு 4000 ரூபாய்க்கு இந்த காய்கறிகளை வாங்கி இவ்வாறு இயற்கை காய்கறி உணவாக உண்ணும் வகையில் வெட்டி பேக் செய்து ஃபிரிட்ஜுக்குள் வைத்துள்ளார். முன்னதாக பெரிய ஹோட்டலின் தலைமையை சமையலராக இருந்த இந்த பெண்மணியின் இந்த செயல் தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

VIRAL, VEGETABLES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்