VIDEO: ‘பாவம்யா மாப்பிள்ளை’.. பொண்ணு பெரிய ‘கபடி’ ப்ளேயரா இருக்குமோ.. வைரலான ‘கல்யாண’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்திருமணத்தின்போது மணமகனிடம் ஜாலியாக விளையாடிய மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக திருமண விழாவின் போது நடைபெறும் குறும்பான சில விஷயங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மணமகனின் நண்பர்கள், மணப்பெண்ணுக்கு சர்பரைஸ் கிஃப்ட் ஒன்று கொடுத்தனர். அதைப் பிரித்தபோது கிஃப்ட் பாக்ஸில் குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டில் இருந்ததால், கோபத்தில் மணப்பெண் அதை தூக்கி வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த வகையில் மணமகனிடம் ஜாலியாக விளையாடும் மணமகளின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திருமண நிகழ்வில்போது மாலை மாற்றும் சடங்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில திருமணங்களில், மாலை மாற்றும் நிகழ்வின் போது மணமகன் மற்றும் மணமகளை மறைப்பது, தூக்கிப் பிடிப்பது போன்ற வேடிக்கையான செயல்கள் நடைபெறும்.
அதேபோல் மாலை மாற்றும் சடங்கில் மணமகனுக்கு மணப்பெண் விளையாட்டு காட்டிய வீடியோ ஒன்றை மனிஷ் மிஸ்ரா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முதலில் மணப்பெண், மணமகனுக்கு மாலையை அணிவிக்கிறார். இதன்பின்னர் மணமகன் தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி மணமகளுக்கு அணிவிக்க முயன்றபோது, மணமகள் மாலையை அணிந்து கொள்ளாமல் போக்கு காட்டினார். கபடி ஆடுவது போல் சிரித்துக்கொண்டே மணமேடையில் அங்கும் இங்கும் அவர் ஓடி விளையாடினார்.
கடைசியாக ஓர் இடத்தில் நின்ற மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் மாலை அணிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்ற நிலையில், இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
மற்ற செய்திகள்
‘இது ரொம்ப கஷ்டமான முடிவுதான்’!.. இன்ஸ்டாகிராமில் ‘சோக’ பதிவு.. திடீர் ‘ஷாக்’ கொடுத்த மியா கலிஃபா..!
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: உங்க 'கடமை' உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா...? எந்த நேரத்துல வந்து 'என்ன' பண்ணிட்டு இருக்கீங்க...? - டிரென்டிங் ஆகும் வீடியோ...!
- VIDEO: மணமகனின் ‘ஃபிரண்ட்ஸ்’ கொடுத்த சர்ஃப்ரைஸ் கிஃப்ட்.. ஆர்வமாக பிரித்த அடுத்த நொடியே ‘கோபமாக’ தூக்கி வீசிய மணப்பெண்.. அப்படி என்னய்யா கிஃப்ட் அது..?
- VIDEO: ‘யாரு பார்த்த வேலைடா இது..!’ மாப்பிள்ளையுடன் தெறித்து ஓடிய குதிரை.. ‘அய்யோ யாராவது போய் பிடிங்க’.. களேபரம் ஆன ‘கல்யாண’ வீடு..!
- VIDEO: ‘யாரும் இப்படி பண்ணாதீங்க’!.. இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!
- சிம்பிளா ‘கல்யாணம்’ பண்ணலாம்.. அதுக்குன்னு இவ்ளோ சிம்பிளாவா.. கல்யாண ‘செலவு’ எவ்ளோன்னு கேட்டா ஆடிப்போயிருவீங்க..!
- ‘ஒரு நிமிஷம் நில்லுங்க’!.. கல்யாணம் முடிஞ்ச கையோட ‘மாப்பிள்ளை’ செஞ்ச செயல்.. அசந்துபோன பெண்வீட்டார்..!
- நீண்ட நாள் ‘காதலியை’ கரம்பிடித்த இந்திய ஆல்ரவுண்டர்.. மும்பையில் நடந்த கல்யாணம்.. குவியும் வாழ்த்து..!
- VIDEO: என்னதான் ‘Photoshoot’-அ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. கல்யாணம் ஆன அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு வந்த ‘அதிர்ச்சி’ தகவல்..!
- VIDEO: இப்போ சந்தோசம் தானே பாட்டி...? 'நெனச்சத நடத்திக் காட்டிய பேத்தி...' - நெகிழ வைக்கும் வைரல் வீடியோ...!
- VIDEO: ரொம்ப பிடிச்ச 'விஷயத்த' வச்சு தான் 'சர்ப்ரைஸ்' பண்ணனும்...! 'அப்படின்னா ஐடியா ரெடி...' 'அத' கொண்டு வாங்கப்பா...! - வைரலாகும் வீடியோ...!