'இதுல ஹைலைட்டே இதான்'.. காதல் வாழ்க்கை அமையாததால் வளர்ப்பு நாயுடன் திருமணம்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்இங்கிலாந்தில் முன்னாள் மாடல் அழகி, தான் ஆசையாக வளர்க்கும் செல்லப் பிராணியான வளர்ப்பு நாயினை லைவ் டிவி நிகழ்ச்சியில் மணம் முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் எஸ்காட் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான மாடல் அழகி எலிசபெத் ஹோட், டிவி நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். 80களில் ஸ்விம் ஸூட் மாடல் அழகிகள் என்றாலே பிரபலமான பெயராக இவரது பெயர் அடிபடும். அப்படி ஒரு அழகிதான் தன்னுடைய வளர்ப்பு நாயினை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை 220 ஆண்களுடன் பழகிய எலிசபெத் ஹோட், கடந்த 8 ஆண்டுகளில் 6 ஆண்களுடன் நெருக்கமாக உறவு வைத்திருந்துள்ளாராம். இரண்டு முறை நிச்சயதார்த்தம் வரை சென்றும் தனது திருமணம் நடக்கவில்லையாம். இதனால் மனம் வெதும்பிப் போன எலிசபெத் ஹோட், தனக்கு காதலில் அதிர்ஷ்டம் இல்லை என்பதால், தான் வளர்க்கும் நாயையே நாளை (ஆகஸ்ட் 02) திருமணம் செய்வதாக டிவி ஷோவில் அறிவித்துள்ளார்.
உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும், கேட்காத எலிசபெத், எந்த ஆண்களும் உறுதுணையாக இல்லாத தனக்கு, தான் வளர்க்கும் லோகன் என்கிற நாய்தான் உறுதுணையாக இருப்பதாகவும், அதனால் லோகனை மணம் முடிப்பதில், தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கென அந்த நாயின் முன்னங்கால்களில் பிரேஸ்லெட் மாட்டி நிச்சயதார்த்தம் செய்துகொண்டதோடு, நாயின் முன், ‘I Do’ என்று நாய் தனக்கு சம்மதம் சொல்வது போல் ஒரு போர்டு வைக்கப்பட்டதுதான் ஹைலைட்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமணத்துக்கு மறுத்த.. ‘பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ குடிபோதையில் உளறியதால் சிக்கிய கொலையாளி..
- புதைந்து போனவர்.. ‘பூமியைத் தோண்டி உயிருடன் மீட்பு..’ மோப்பம் பிடித்த நாய்க்கு குவியும் பாராட்டுகள்..
- இந்திய பெண்ணுடன் பிரபல பாகிஸ்தான் வீரர் திருமணமா..? வெளியான தகவல்..!
- ‘ஓனர் செய்த வேலையால்’... ‘பிஎம்டபிள்யூ காருக்குள் பரிதவித்த நாய்’... 'போலீஸ் செய்த அதிரடி'!!
- '4 திருமணம்'.. 'நள்ளிரவில் மிஸ்டு கால்'.. சந்தேகப்பட்டு களத்தில் இறங்கிய மனைவிக்கு ஷாக்!
- ‘நாய்க்கு பயந்து வீட்டுக்குள் ஒதுங்கியவரை..’ திருடன் என நினைத்து செய்த கொடூரம்..
- 'கல்யாணம் ஆகமாட்டேங்குது'... 'அப்போ இத பண்ணி தான் ஆகணும்'... ஆண்கள் எடுக்கும் முடிவு!
- திருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்..! வெளியான அதிரவைக்கும் காரணம்..!
- 'தடைகளைக் கடந்து'.. எளிமையாக நடந்த நந்தினி திருமணம்.. திருமணத்தில் எடுத்த உறுதிமொழி.. வீடியோ!
- ‘எங்க பொண்ணையா காதலிக்கிற??’... 'நம்பி சென்ற கர்ப்பிணி மனைவி'... 'இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'!