'இங்கிருந்த பாதைய காணோம் சார்'.. 'அதான் இப்படி பண்ணிட்டேன்'.. ஊபர் டிரைவர் செய்த வைரல் காரியம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

இன்றைய சூழலில் உள்ளூர் பயணம் என்பது சற்றே எளிதாகியுள்ளது. அவசர காலத்தில் நாம் டாக்ஸிக்கு பணம் கொடுத்து போகத் தயாராகிவிட்டோம் என்றால், டாக்ஸி மற்றும் ஆட்டோ இருக்குமிடம் தேடிச் செல்லவோ அல்லது போன் செய்து டாக்ஸி புக் பண்ணவோ கூட அவசியமில்லை.

நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஆப் மூலம், பிக்-அப் லொகேஷன் மற்றும் டிராப் லொகேஷனை டைப் செய்யலாம். பிங்க் செய்து, சம்மந்தபட்ட செயலியே நம் இருப்பிடத்தின் அட்ரஸை கண்டுபிடித்துக்கொள்ளவும் நாம் உதவலாம். ஆனால் கேப் டிரைவர்களைப் பொருத்தவரை பலரும் தொழில்நுட்பத்தை நம்பி, அதாவது கூகுள் மேப்பினை நம்பி ரூட்டுகளில் வாகனங்களை இயக்குகின்றனர்.

இப்போது வந்த கூகுள் மேப்களே இப்படி என்றால், எப்போதோ பார்த்த ஏரியா, எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும் என நினைத்துக்கொண்டு செல்வது எவ்வளவு அபத்தம் என்பதை ஒரு கேப் டிரைவர் நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் போண்டி நகருக்குள்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  ஊபர் கேப் டிரைவர் தான் செல்வது போக்குவரத்து வழிதான் என நினைத்துக்கொண்டு, படிக்கட்டுகளில் விட்டு ஆடி காரையே ஆட்டம் காட்ட வைத்திருக்கிறார்.

இதுபற்றி பேசியுள்ள ஊபர் டிரைவர், அது வழிதான் என நினைத்துக்கொண்டு சென்றதாகவும், ஆனால் அந்த இடத்தில் படிக்கட்டுகள் இருந்ததை பார்த்ததும், மீண்டும் திரும்ப முடியவில்லை என்பதால், அதிலேயே ஆடி காரை இறக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

UBER, CAB, DRIVER, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்