Video : "தேன் குடிக்க கரடி வந்தல்லோ..".. தண்ணீர் குடிக்க படியில் ஏறிய கரடி செஞ்ச காரியம்.. க்யூட் வீடியோ

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

கரடி ஒன்று, உயரமான தண்ணீர் தொட்டி மீது ஏறி, தேன் குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

விரட்டிக் கொட்டும் தேனீக்களின் நடுவில் இருக்கும் தேனை தேடிச் சென்று கரடி ஒன்று குடிக்கிறது. அதற்காக படிக்கட்டுகளில் மத்தியில்,  ஏறி போகும் கரடியின் செயல் வீடியோவாக வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை இந்திய வனப்பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

1.12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், உயரமான நீர் நிலை தொட்டியின் வளைந்து நெளிந்த படிக்கட்டுகளில் கரடி ஒன்று ஏறுகிறது. அங்கே இன்னொரு கரடி அங்கு படிகளின் அடியில் இருக்கும் தேனீக்கள் கூட்டை நெருங்கியதுடன், கொஞ்சமும் பயம் இல்லாமல், கரடி கூட்டில் இருக்கும் தேனை ருசி பார்க்கிறது.

இந்த வீடியோவைப் பதிவிட்ட சுசந்தா நந்தா, "விலங்குகள் தங்களுக்கு பிடித்த உணவுக்காக எதையும் செய்யும் என்பதையே, தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்க வளைந்த படிக்கட்டுகளில் கரடி ஏறும் இந்த செயல் காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் பலரும், ஆனாலும் தேனீக்களிடம் அகப்படாமல், கொட்டு கடி வாங்காமல் அந்த கரடி தப்பித்தது அதிசயம்தான்  என்றும், இந்தக் கரடி கார்ட்டூன் கதாபாத்திரமான பூஹ் கரடியை நினைவுபடுத்துவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

 

BEAR, VIDEO VIRAL, ANIMAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்