'அவர் இறந்துட்டார் .. இருங்க அவர் கிட்டயே கேப்போம்'.. Live-ல் உளறிய நிரூபர்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

அமெரிக்காவின் பிரபல செய்தி சேனல் ஒன்றின் பெண் நிரூபர் நேரலையில் செய்தியை கடத்தும்போது நிகழ்ந்த களேபரத்தால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

பொதுவாகவே நேரலையில் செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பது என்பது இயல்பை விடவும் சிரமமான காரியம். குறிப்பிட்ட நிமிடங்களுக்கு அந்த செய்தியை நீட்டி முழக்கியும் சொல்ல  வேண்டிவரும். சில நேரங்களில் சுருக்கமாகவும் சொல்ல வேண்டிவரும். 

ஆனாலும் லைவ்வில் செய்திகளைக் கடத்தும் நிரூபர்கள் தங்களுக்கென சில டெம்ப்ளேட் பாணிகளைக் கையாளுவதுண்டு. அதுதான், செய்தியில் சம்மந்தப்பட்டவரிடம் அச்செய்தியின் உண்மைத் தன்மை பற்றி கேட்டபோது அவர்கள் கூறியது என்னவென்று சொல்லும் ஒரு உத்தி. 

அப்படித்தான் அமெரிக்க செய்தி நிரூபர் சாரா வெச், போலீஸார் துரத்திச் சென்றதில் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டதாக கூறுகிறார். ஆனால், அவருக்கே போன் செய்து இச்சம்பவம் எப்படி நடந்தது என்கிற முழு விபரம் குறித்து அந்த நபரை (இறந்துபோனவரை) தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பேசியது வைரலானது. 

இதனையடுத்து நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைத்து மீம்ஸ், ஜோக்ஸ் என பல வகையிலும் கலாய்த்து வருகின்றனர். 

MEDIA, NEWS, REPORTER, VIRAL, VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்