‘கொஞ்சம் நில்லுங்க’.. லிப்ட்ல ‘அத’ கொண்டு போகக்கூடாது.. ஏன்னு கேட்டத்துக்கு பெண் சொன்ன ஒரு ‘பதில்’.. ஆடிப்போன நபர்..!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது சக குடியிருப்புவாசி மீது கொடுத்த புகார் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஹார்ஷ் மிட்டல் என்பவர் பி ப்ளாக் 4-வது மாடியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு புதிதாக ஏசி ஒன்றை வாங்கி வந்துள்ளார். ஏசி இயந்திரம் கணமாக இருந்ததால் லிப்ட்டில் வைத்து எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த சக குடியிருப்பு வாசியான பெண் ஒருவர் மிட்டலை ஏசி இயந்திரத்தை லிப்ட்டில் ஏற்ற விடாமல் தடுத்துள்ளார்.  உடனே ஏன் என அவரிடம் மிட்டல் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதிலை கேட்டு மிட்டல் ஆடிபோயுள்ளார்.

மிட்டல் தனது வீட்டுக்கு ஒன்றரை டன் ஏசி (1.5 ton AC) வாங்கி வந்ததுதான் பிரச்சனை. இதைப் பார்த்த அந்த பெண், இந்த லிப்டில் அதிகபட்சம் 350 கிலோ வரை தான் எடுத்து செல்ல முடியும், நீங்கள் எப்படி ஒன்றரை டன் எடையுடைய ஏசி இயந்திரந்தை கொண்டு போக முடியும் என தடுத்துள்ளார். உடனே ஏசியின் எடை ஒன்றரை டன் கிடையாது, அது வெறும் 20 கிலோதான் இருக்கும் என மிட்டல் விளக்கியுள்ளார்.

ஆனால் இதை எதையும் நம்பாத அவர் மிட்டல் குறித்து அடுக்குமாடி குடியிருப்பு அசோசியேஷனில் புகார் அளித்துள்ளார். அதனை மிட்டல் தனது செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலானது. அதற்கு பலரும் பல விதமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்