190 வயதில் கின்னஸ் சாதனை... ஜொனாதன் ஆமைக்கு குவியும் பாராட்டுகள்

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

உலகில் வாழும் மிக பழமையான நில விலங்கு என 190 வயதான ஜொனாதன் ஆமை மற்றொரு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

Advertising
>
Advertising

சில உயிரினங்கள் மனிதர்களின் வாழ்நாளைவிட அதிகமான ஆண்டுகள் வாழ்வது குறித்து படிக்கும்போது  வியந்திருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக எப்போதுமே நிற்பது ஆமைகள்தான். அத்தகைய ஆமை ஒன்றின் வயது 190 என்பதை பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

190 வயது

இந்த ஆண்டு தனது 190 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜொனாதன், இதுவரை வாழ்ந்த ஆமைகளிலேயே மிகவும் வயதான ஆமை என்று கின்னஸ் உலக சாதனை புத்தகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான கடல் ஆமைகள், ஆற்று நீர் ஆமைகள் மற்றும் நிலவாழ் ஆமைகளில் மிகவும் பழமையான ஆமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொனாதன்

முந்தைய பழமையான செலோனியன் ஆமை 188 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது. ஜொனாதன் (Jonathan)  ஆமை அல்டாபிரா (Aldabra) வகையைச் சேர்ந்த பெரிய ஆமை வகை. இதுதான் நிலவாழ் ஆமைகளிலேயே மிகப் பெரிதாக வளரக்கூடிய வகை. இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஹெலினாவில் தான் இந்த ஆமை வாழ்கிறது.

பிரிட்டிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜொனாதன் குளிர்காலத்தை நன்கு கடந்து வந்துள்ளது , இப்போது நன்றாக மேய்கிறது. வயது மூப்பினால் பார்வை மற்றும் வாசனை திறன் குறைபாடு உள்ளது.   இதனால்,  கலோரிகள், வைட்டமின்கள், தாதுக்களை அதிகரிக்க கால்நடை மருத்துவப் பிரிவு அதற்கு வாரத்திற்கு ஒரு முறை உணவளித்து வருகிறது' என தெரிவித்துள்ளது. ஜொனாதன் ஆமை 1832ல் பிறந்ததாக நம்பப்படுகிறது, இதனால் அதற்கு 2022இல் 190 வயதாகிறது.

வைரல்

இந்த ஆமை 1882 ஆம் ஆண்டு சீஷெல்ஸிலிருந்து செயின்ட் ஹெலினாவுக்கு வந்தபோது, முழுமையாக முதிர்ச்சியடைந்து, குறைந்தது 50 வயதுடையதாக இருந்தது என்ற அடிப்படையில் ஜொனாதனின் வயது மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1886-ம் ஆண்டு ஒருமுறை எடுக்கப்பட்ட புகைப்படம், சமீபத்தில் எடுக்கப்பட்ட அதன் படம் ஒன்றோடு சேர்த்து #187yearschallenge என்று இரண்டையும் ஒப்பிட்டுச் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

ஜொனாதன் 1882இல் சர் வில்லியம் கிரே-வில்சனுக்கு பரிசளிக்கப்பட்டதிலிருந்து, அந்த அரசிற்கும், மாளிகைக்கும் 31 ஆளுநர்கள் வந்து சென்றுள்ளனர். ஜொனாதன் இன்றும் அதே மைதானத்தில் சுற்றித் திரிகிறது,  அதோடு டேவிட், எம்மா மற்றும் ஃப்ரெட் ஆகிய மூன்று பெரிய ஆமைகளுடன் வாழ்கிறது.

190 YEARS, GUINNESS BOOK OF WORLD RECORDS, JONATHAN 190 YEARS, LONDON, WORLD’S OLDEST LIVING TORTOISE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்