'10 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும்'... 'அந்த மாதிரி விளம்பரத்தில்'... 'ஷில்பா செய்த தரமான சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறியும், விளம்பர படம் ஒன்றில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'10 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும்'... 'அந்த மாதிரி விளம்பரத்தில்'... 'ஷில்பா செய்த தரமான சம்பவம்'!

இந்திய திரைப்பட உலகில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. திரைப்படங்களில், முன்னனி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான அவர் மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, சில படங்களில் மட்டும் நடித்தார். பின்னர் திருமணமான பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார் ஷில்பா ஷெட்டி.

தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார் 44 வயதான ஷில்பா ஷெட்டி. அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள் மூலம் பிரபலமாக உள்ளார். தினமும் யோகா, ஒர்க்அவுட், தியானம் செய்யத் தவறாதவர் ஷில்பா ஷெட்டி. 

இந்நிலையில் உடல் எடையை குறைக்கும் பிட்னஸ் ஆயுர்வேத மாத்திரை குறித்த விளம்பரம் ஒன்றில் நடிக்க சொல்லி ஷில்பாவிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஷில்பாவோ எவ்வளவு கோடி கொடுத்தாலும், அந்த மாதிரியான நம்பிக்கையற்ற விஷயங்களுக்கு விளம்பரம் செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார்.

மேலும் இதுபற்றி கூறிய ஷில்பா ‘உடல் எடையை குறைக்கும் மாத்திரைகள் உடனடி பலன் தரும் என்பதெல்லாம் கேட்க நன்றாகதான் உள்ளது. ஆனால் சத்துமிக்க உணவுகளை உண்டு, ஆரோக்கியமாக வாழும் வாழ்வை எந்த மாத்திரையாலும் தர முடியாது. இயற்கையான முறையில் யோகா, உடற்பயிற்சி செய்தாலே உடல் எடையை குறைக்கலாம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால், பல காலம் நல்லபடியாக வாழலாம்’ எனக் கூறியிருக்கிறார்.

இளம் தலைமுறையினர் உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று, கண்டதையும் வாங்கி சாப்பிடாமல், இயற்கையான முறையில் யோகா, ஒர்க்அவுட் செய்வதுடன், சத்தான உணவை சாப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

SHIPASHETTY, ACTRESS, SLIMMINGPILLS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்