எல்.கே.ஜி. குழந்தைக்கு வயது 35...! வாக்காளர் அட்டை வழங்கிய தேர்தல் ஆணையம்... தெலங்கானாவில் நடைபெற்ற கூத்து...

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

தெலுங்கானாவில் எல்கேஜி படிக்கும் 3 வயது குழந்தைக்கு 35 வயது நிரம்பியதாகக் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பதே நியதி.  அவ்வாறு 18 வயது நிரம்பியவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகங்கத்தில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

இதுவரை வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மாற்றம், திருத்தம் போன்றவற்றின் போது பிழைகள் நடந்துள்ளன.  வயதான பெண்மணியின் வாக்காளர் அட்டையில் நடிகையின் புகைப்படம், முதியவரின் வாக்காளர் அட்டையில் கடவுளின் புகைப்படம், ஒரே நபருக்கு 2 முகவரியில் வாக்காளர் அட்டை போன்ற பிழைகள் நடந்தேறியுள்ளன. அந்த வரிசையில் தற்போது 3 வயது குழந்தைக்கு 35 வயது எனக் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 3 வயது குழந்தை நந்திதா  எல்.கே.ஜி. படித்து வருகிறார். அவருக்கு புகைப்படத்துடன் 35 வயது எனக் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து குழந்தையின் தந்தை, தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தத்தின் போது பெயர் நீக்கப்படும் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

ELECTIONCOMMISSION, ELECTIONCOMMISSION, LKG CHILD, VOTER ID ISSUED CHILD, TELANGANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்