கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க இறந்தவர் போல நாடகம் ஆடிய நபர்..! அப்பாவி உறவினர் செஞ்ச ட்விஸ்ட்டால் சிக்கிய சுவாரஸ்யம்.!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

உலகம் முழுவதும் பலரும் கடவுளுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ கடன் காரர்களுக்கு கண்டிப்பாக பயப்படுவார்கள். அந்த வகையில் கடன் காரர்களுக்கு பயந்து தம்பதி செய்த பரபரப்பு நாடகம் அம்பலம் ஆகியிருக்கிறது.

Advertising
>
Advertising

இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்தாவில் இருக்கும் தம்பதி ஒருவர் கடனிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழி செய்துள்ளனர். அதன்படி அந்த வீட்டின் குடும்பத் தலைவராக இருக்கும் 40 வயது மதிக்கத்தக்க Urip Saputra என்பவர் இறந்து விட்டதாக நாடகமாட முடிவு செய்திருக்கிறார். இந்த திட்டத்தை போட்ட பின்னர் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு போன் பண்ணி தகவல் சொல்லி இருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ் வந்ததும் அனைவரும் ஆம்புலன்ஸில் ஏறி செல்ல, ஓரிடத்தில் 10 நிமிடம் ஆம்புலன்ஸை நிறுத்த சொல்லி இருக்கின்றனர். அதன் பிறகு அங்கிருந்து வாகனம் புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் அந்த நபர் இறந்தவராகவே நம்ப வைக்கப்படுகிறார். இந்த நாடகத்தை நம்பி அனைவரும் அவர் இறந்து விட்டார் என்று கருதிவிட்டனர். மருத்துவமனையும் அவ்வாறே முடிவு செய்துவிட்டது. இதனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் கிடைப்பதற்கு அனைத்தும் முடிவாகிவிட்டது.

ஆனால் இதனை அவளுடைய உறவினர் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்த பின் அந்த நபர் உயிருடன் எழுந்து வர, உறவினர் அதை வீடியோ எடுத்துவிட்டார். அவரோ தங்களுடைய இறந்த உறவினர் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டார் என்று நம்பி அந்த வீடியோவை பகிர, உண்மையில் அது நாடகம் என்பது அந்த உறவினருக்கும் தெரியாது.

வைரலான இந்த வீடியோவை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் போலீசாரிடத்தில் கூற, போலீசார் இது குறித்து விசாரிக்கத் தொடங்கினர். முதற்கட்டமாக ஆம்புலன்ஸ் டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான் இந்த தம்பதியின் நாடகம் அம்பலம் ஆகி இருக்கிறது. இது குறித்து அவர்கள் மேற்கொண்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் இவ்வாறு நாடகமாடி அம்பலமான சுவாரஸ்ய சம்பவம் வைரலாகி வருகிறது.

INDONESIAN, URIP SAPUTRA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்