'ஒளிஞ்சிருக்குற லட்சணத்த பாருங்க!'... 'உலக லெவலில்’ வைரலான ‘க்யூட்’ குட்டி யானை!'.. சம்பவத்து அன்னைக்கு என்ன நடந்துச்சுனா..!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

தாய்லாந்து 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அங்கும் நம்மூர்களை போலவே வயல்களுக்குள் புகுந்து  அங்குள்ள சோளம், கரும்பு போன்றவற்றை தின்றுவிட்டு செல்லும் சம்பவங்களை யானைகள் சளைக்காமல் நடத்தி வருகின்றன.

எனினும் யானைகள் வருவதைத் தடுக்க இரவிலும் காவல் பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.  இந்த நிலையில் வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் கரும்பு தோட்டம் ஒன்றில் சலசலப்பு கேட்க, அங்கிருந்த காவலர்கள் டார்ச் லைட்டை தூக்கிக் கொண்டு ஓடி பார்க்க, அங்கு ஒரு சுவாரஸ்ய நிகழ்வை கண்டிருக்கிறார்கள்.

ஆம், கரும்பை சுவைக்க ஆசைப்பட்ட குட்டி யானை ஒன்று தனிமையில் இனிமை காண இரவு நேரத்தில் வந்து கரும்பு தோட்டத்திற்கு அது புகுந்திருந்த நிலையில் ஆட்கள் டார்ச் லைட்டோடு வருவதை கண்டதும் அறிவாளித் தனமாக பயந்து ஓடி ஒளிய முயற்சித்து, முடியாததால், சமயோஜிதமாக அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் பின்னால் ஒளிந்து கொண்டு அசைவில்லாமல் நின்று கொண்டது.

‘நாம் மின்கம்பத்தை விட பெரிதாக இருக்கிறோமே!’.. என்ற யோசனையே இல்லாத அந்த சுட்டி யானைக்குட்டி மின்கம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சித்ததை பார்த்த காவலர்கள் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.  தற்போது அந்த யானைக்குட்டியின் க்யூட்டான  புகைப்படம் உலக லெவலில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்