“அந்த பார்க்ல எறக்கிவிட்ருங்க!”.. “சிட்டி பேருந்தில் நாய் செய்யும் ரெகுலர் வேலை!”.. ஆச்சரியத்தில் பயணிகள்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று தினமும் தானாகவே பேருந்தில் ஏறி, பூங்கா வரை சென்று அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பேருந்து ஏறி வீட்டுக்கு வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த ஜெப் என்பவரால் லேப்ரடார் என்கிற கருப்பு இன பெண் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. எக்லிப்ஸ் (Eclipse) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நாய் தினமும் தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பிச்சென்று பேருந்து ஏறுகிறது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் எல்லாம் இந்த நாயை மிகவும் அபூர்வமாக பார்க்கின்றனர். 

அப்படி பேருந்து ஏறி இந்த நாய் எங்கே செல்கிறது என்று சொன்னால், அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று ஓய்வு எடுக்கிறது. மனிதர்களைப்போல தன்னந்தனியே பேருந்தில் ஏறி பூங்காவிற்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் இந்த நாய் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தவிர இந்த நாயின் கழுத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கான பஸ்பாஸ் இணைக்கப் பட்டிருப்பதால், இதை யாரும் தடுப்பதும் இல்லை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சுமார் 3 லட்சம் பார்வைகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

ECLIPSE), DOG, BUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்