81 வயசு 'மணமகளை'.. திருமணம் செய்துகொண்ட.. '24 வயது மாப்பிள்ளை'.. 'வேற லெவல் காரணம்'!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

24 வயதே ஆன இளைஞர் ஒருவர் 81 வயது மூதாட்டியைத் திருமணம் செய்வதற்கான அவசியம் வருவதற்கான அரிதான காரணங்களே இருக்கக் கூடும்.

ஆனால் இங்கு அந்த இளைஞருக்கு உண்டாகியிருப்பதோ நெருக்கடி என சொல்லலாம்.  உக்ரைனில் 24 வயதான அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்கிற இளைஞர், தனது நாட்டில் இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், அதில் இருந்து தப்பிக்க வழியின்றி 81 வயது மூதாட்டியை திருமணம் செய்துகொண்டுள்ளார். ராணுவத்தில் ஆள் சேர்க்கிறார்கள். அதில் தன்னை சேர்த்துவிடக் கூடாது என நினைக்கும் அலெக்ஸாண்டர், ஒரு 81 வயது மூதாட்டியைத் திருமணம் செய்துகொள்வதால் மட்டும் எப்படி அந்த நெருக்கடியில் இருந்து தப்ப முடியும் என்கிற சந்தேகம் எழலாம். அந்த நாட்டில் அது முடியும்.

காரணம், வீட்டில் இருக்கும் மனைவி மாற்றுத்திறனாளி எனும் பட்சத்தில் அந்த கணவர் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றொரு விதி அங்கு உண்டு. இதனால், தனது கிராமத்தில் இருக்கும் தனது உறவுமுறை மூதாட்டியான 81 வயது ஸினைடா இல்லாரியோனோவ்னா-வை அலெக்ஸாண்டர் மணம் முடித்துக்கொண்டார். அந்த இளைஞரைத் தேடி, ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் எண்ணத்தில் வரும் அதிகாரிகளோ, அலெக்ஸாண்டரின் திருமண சான்றிதழையும், அலெக்ஸாண்டரின் 81 வயது மனைவி மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும் பார்த்துவிட்டு, பின்வாங்கிவிடுகின்றனர்.

இதனிடையே, அலெக்ஸாண்டர் திருமணத்துக்குப் பின் ஒரு முறை கூட, தனது மனைவியின் வீட்டுக்கு வருவதில்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், மூதாட்டியோ, தனது 24 வயதான கணவர் தன்னை பாசமாக பார்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

MARRIAGE, YOUTH, GRANNY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்