ஐயோ..! ஒரு நிமிஷத்துக்கு இத்தனை ஆர்டரா..! இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததேயில்ல.. புத்தாண்டில் ‘ஆன்லைன்’ ஆர்டரை அதிரவைத்த மக்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

புத்தாண்டு இரவில் நிமிடத்துக்கு ஆயிரத்துக்கும் அதிகமான உணவு ஆர்டர்கள் வந்ததாக ஜொமேட்டோ சிஇஓ தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக 2021 புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாடினார்கள். இதனால் பலரும் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். அதில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோவுக்கு நிமிடத்துக்கு 4,100 ஆர்டர்கள் குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை மட்டுமே நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்கள் குவிந்துள்ளது. மாலை 6 மணிக்கு நிமிடத்துக்கு 2,500 ஆர்டர்களாக வந்து கொண்டிருந்துள்ளது. அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்களாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஜொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருந்தனர். இதனால் எங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தன. வாடிக்கையாளர்கள் முன்னாடியே ஆர்டர் செய்வது நல்லது. கடைசி நிமிடத்தில் ஆர்டர் செய்தால் காத்திருக்க நேரிடும். இப்போதைக்கு ஒரு லட்சம் ஆர்டர்கள் ஆங்காங்கே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னால் இப்படி நடந்து பார்த்ததே இல்லை’ என தீபிந்தர் கோயல் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்