கேட்கவே புதுசா இருக்கே.. ‘உடல் எடையை குறைச்சா போனஸ்’.. ஊழியர்களுக்கு சூப்பர் டாஸ்க் கொடுத்த நிறுவனம்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஊழியர்கள் உடல் எடையை குறைத்தால் போனஸ் தரப்படும் என தனியார் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

ஜெரோதா (Zerodha) நிறுவனம் தங்களது ஊழியர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக புதிய சுகாதார திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதன்படி, உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு போனஸாக அரை மாத ஊதியம் வழங்கப்படும். எங்களது ஊழியர்களின் சராசரி பிஎம்ஐ 25.3 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊழியர்கள் தங்களது சராசரி உடல் நிறை குறியீட்டு எண்ணை 24-க்கு கீழ் கொண்டு வந்தால், நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் போனஸாக மேலும் அரை மாதம் ஊதியம் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இருப்பதிலே குறைவான உடல் நிறை குறியீட்டு எண்ணை கொண்டவர்களோ அல்லது அதிகளவில் உடல் நிறை குறியீட்டு எண்ணில் மாற்றம் கண்டவர்களோ வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள். ஒரு சுகாதார நிறுவனம் இந்த முயற்சியை முன்னெடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற முயற்சியை உங்கள் நிறுவனத்திலும் முன்னெடுக்க நினைத்தால், கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள் என நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

உடல் நிறை குறியீட்டு எண் என்பது, உடல்நிலை மற்றும் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கான சிறந்த நடைமுறை அல்ல என்பது தெரியும். ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் மற்ற பெரும்பாலான விஷயங்களுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது, ஓர் முயற்சியை முன்னெடுப்பது மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.

ZERODHAS, WEIGHTLOSS, BONUS, EMPLOYEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்