வயசு 19 தான் ஆகுது.. காலேஜ் படிப்பையும் முடிக்கல.. ஆனா சொத்து மதிப்பை கேட்டா ஆடிப்போய்டுவீங்க.. சறுக்கிய இடத்துல சாதிச்ச இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

செப்டோ (Zepto) நிறுவனத்தின் துணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா, இந்தியாவில் மிக இளம் வயதில் 1000 கோடி ரூபாய் சொத்து கொண்டவர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | மாடலிங் பெண்கள் தான் டார்கெட்டே.. இளைஞரின் தினுசான உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!

Zepto

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆதித் பலிச்சா என்பவருடன் இணைந்து Zepto நிறுவனத்தை துவங்கினார் வோஹ்ரா. புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே, தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் இந்தியா திரும்பியிருக்கின்றனர். 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படுவதை கண்ட, இருவரும் Zepto நிறுவனத்தின் மூலமாக மளிகை பொருட்களை ஆன்லைன் டெலிவரி செய்ய நினைத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் போட்ட விதை தற்போது பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

ஆரம்பத்தில் KiranaKart என்ற பெயருடன் நிறுவனம் துவங்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே Zepto என பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில், இந்த நிறுவனத்தின்  மதிப்பு 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். துவக்கத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் பெறலாம் என்று அறிவித்தது இந்த நிறுவனம். இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.

சொத்து மதிப்பு

இந்நிலையில், ஹாரூன் மற்றும்  IIFL Wealth அமைப்பு இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி வோஹ்ராவின் தற்போதைய சொத்து மதிப்பு 1000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்திய பணக்காரர்களின் வரிசையில் வோஹ்ரா 1,036 வது இடத்தில் இருக்கிறார். இதன்மூலம் மிக இளம் வயதில் 1000 கோடி ரூபாய் சொத்துக்கொண்ட நபர் என்ற பட்டியலில் இணைந்திருக்கிறார் வோஹ்ரா. இவரது பங்குதாரர் ஆதித் பலிச்சாவிற்கு தற்போது 20 வயதாகிறது. இவருடைய சொத்து மதிப்பு 1200 கோடி ரூபாய் ஆகும்.

ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகிய இருவருமே சிறுவயது நண்பர்கள். இருவரும் துபாயில் படித்தவர்கள். பலிச்சா, தன்னுடைய 17 வயது முதல் ஸ்டார்ட் அப் கனவில் இருந்ததாக பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், இருவரும் இணைந்து துவங்கிய இந்த நிறுவனம் இரண்டே வருடங்களில் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பது, ஸ்டார்ட் அப் உலகில் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

Also Read | க்ளோனிங் ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த ஆராய்ச்சியாளர்கள்.. அவங்க தேர்ந்தெடுத்த விலங்கு தான் ஹைலைட்டான விஷயம்..!

ZEPTO KAIVALYA VOHRA, NET WORTH, ZEPTO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்