Work From Home-ல இப்படி ஒரு சிக்கல் இருக்கா!?.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்!.. ஊழியர்களுக்கு அடித்த 'ஷாக்'!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

Work from home முறையில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிக வரி செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஐடி மற்றும் பிற துறை ஊழியர்கள், Work from home முறையில் வேலை செய்து வருகின்றனர். இதனால், அவர்கள் ஆண்டு தோறும் செலுத்தும் வரித்தொகை அதிகமாகும் சூழல் உருவாகியுள்ளது.

WFH ஊழியர்கள் பெரும்பாலும் பெரு நகரங்களிலிருந்து வெளியேறி சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், அவர்கள் ஊதியத்தில் வழங்கப்படும் House Rent Allowance(HRA) மற்றும் Leave Travel Allowance(LTA) ஆகியவற்றிற்கு வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலைசெய்வதால் மேற்கூறிய படித் தொகையை செலவிட முடியாமல் போகிறது. இப்படி செலவிடாத தொகைக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

படித் தொகையை செலவிட்டால் மட்டுமே அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி வரி விலக்கை பெறுவதற்கு உரிய ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், பயணம் செய்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் படிக்கு வரி கட்ட நேரிடும்.

தற்போது கொரோனா ஊரடங்கில் பயணம் பாதுகாப்பானது அல்ல. அதுபோக, ஏராளமான ஊழியர்கள் பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று அங்கிருந்து வேலை செய்து வருகின்றனர். ஆகவே, படித் தொகைக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்