மைக்ரோசாஃப்ட் எக்ஸல் கத்து கொடுத்து மாசம் 'ஒரு கோடி' சம்பாதிக்கிறாரா...? - அதுக்கு 'காரணம்' மத்தவங்க நடத்துற மாதிரி 'கிளாஸ்' எடுக்கல...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கேட் நார்டான் (27) என்ற பெண்மணி, மைக்ரோசாஃப்ட் எக்ஸல்லில் தனக்கு தெரிந்தவற்றை வீடியோ மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக்கில் பகிர்ந்து மாதம் 1 கோடி சம்பாதித்து வருகிறார்.
இவர் பிறரை போல் இல்லாமல் மிகவும் ஜாலியான முறையில் கற்றுக் கொடுக்கிறார். இதன் காரணமாக இவருக்கு விரைவிலேயே அதிக பேர் பின்தொடர்பவர்கள் ஆகி விட்டனர். இவர் தனது கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு ஆன்லைனில் மைக்ரோசாஃப்ட் எக்ஸல் சொல்லி தரலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், நவம்பர் 2020-இல் தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளார். அதற்கு @miss.excel என்று பெயரிட்டுள்ளார். இதை தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளே இவரின் கனவு நனவாக மாறியது. இவர் தற்போது லட்சத்தில் இருந்து கோடி வரை, ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் சொல்லி தருவதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.
இவருக்கு ஒரே வருடத்தில் லட்சக் கணக்கான பின்தொடர்பவர்கள் வர தொடங்கினர். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், கேட் மற்றவர்களை போன்று இல்லாமல் சொல்லி தருவதை ஜாலியான முறையில் கற்றுக் கொடுக்கிறார். இவரின் எல்லா வீடியோக்களும் ஆடல், பாடல் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அத்துடன் நீங்கள் கற்க வேண்டியவற்றையும் கற்று முடித்து விடலாம்.
இது மக்களிடையே வரவேற்பை பெற்ற கேட், ஆன்லைனில் சொல்லி தரும் வேலையை முழு நேரமாக செய்ய தொடங்கி விட்டார். இவர் மைக்ரோசாஃப்ட் எக்ஸல் மற்றும் கூகுள் ஷீட் பற்றிய வகுப்புகளை எடுப்பதுடன் இதர மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆன்லைன் புராடக்ட்களையும் வகுப்புகளாக எடுத்து எக்கச்சக்கமாக பணம் சம்பாதித்து வருகிறார்.
இந்திய மதிப்பில் லட்சங்களில் சம்பாதித்து வந்த அவர், தற்போது இவரின் தீவிர முயற்சியின் மூலம் மாதம் ஒரு கோடி சம்பாதிக்கிறார். இவரின் ஆண் நண்பரும் தனது வேலையை விட்டுவிட்டு, முழு நேர பணியாக கேட் நார்டானுடன் இணைந்துள்ளார்.
மற்ற செய்திகள்