கனத்த இதயத்துடன், இறக்கையை முறித்துக்கொண்ட விமான நிறுவனம்!.. வருத்தம் தெரிவித்த மல்லையா!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன்னுடைய சேவையை  (ஏப்ரல் 17-ஆம் தேதி இரவு) முழுமையாக நிறுத்தியுள்ளது.

ஜனவரி மாதம் முதல் விமான ஓட்டுநர்கள் தத்தம் சம்பள பாக்கியை திருப்பி அளிக்கக் கோரி வேலை நிறுத்தம் செய்ததை அடுத்து, இடைக்கால நிதியாக 1,500 கோடி ரூபாயைத் தர முடிவு செய்தது. ஆனால் அதுவரை கூட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தாக்கு பிடிக்க முடியாத சூழலில் இருந்து வந்தது.

44 விமானங்களை வைத்திருந்த ஜெட்  ஏர்வேஸ் 7 விமானங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கடைசி நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. ஆயினும் இன்னும் இருக்கும் நாட்களில் எரிபொருளுக்கே ஆயிரங்கோடி கணக்கில் பணம் தேவைப்படுவதால், முன்னமே இருக்கும் கடன்கள் உட்பட, அடுத்து தேவைப்படம் கடன்களை அளிக்கவும் எஸ்பிஐயை தவிர வேறு எந்த வங்கிகளும் முன்வராததால் இந்த முடிவினை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

மேலும் அனைத்துவிதமான பொருளாதார சூழல்களையும் ஆராய்ந்து, மேற்கொண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ரன் செய்வதற்கான சாத்தியங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல், ஏப்ரல் 17-ஆம் தேதி இரவுடன் முழுமையான சேவையை நிறுத்திக்கொள்வதாக தனது அறிக்கையில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், மும்பையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸூக்கு செல்லும் விமான சேவை தான் கடைசியாக இயக்கப்படும் சேவை என்று அறிவித்ததோடு, நேற்றைய இரவு தன் சேவையை தற்காலிக அடிப்படையில் நிறுத்திக்கொண்டது. இதற்கு தொழிலதிபர் மல்லையா, தனது ட்விட்டர் பக்கதில் வருத்தம் தெரிவித்துள்ளார். 

FLIGHT, PLANE, AIR, JETAIRWAYS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்