ஐடி ஊழியர்களுக்கு 'நற்செய்தி' சொல்லி... கெத்து காட்டிய 'பிரபல' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

வருங்காலத்திலும் பணிநீக்கம் இருக்காது என வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

உலகம் முழுவதும் விஷமென பரவியிருக்கும் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர். வேலையிழப்பால் வறுமை, பசி ஆகியவை பெரும்  பிரச்சினைகளாக உருவெடுத்து வருகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் வெளியில் தெரியாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ கொரோனாவை காரணம் காட்டி பணிநீக்கம் செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளது. இதுகுறித்த விப்ரோ நிறுவன தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, '' கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி எந்தவொரு ஊழியரையும் பணிநீக்கம் செய்யப்போவது இல்லை. வருங்காலத்திலும் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை,'' என தெரிவித்து ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்