'பிரபல IT கம்பெனியில்...' ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு...! '7,000 பேருக்கு ப்ரோமோஷன்...' - ஊழியர்கள் செம ஹேப்பி...!
முகப்பு > செய்திகள் > வணிகம்விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்குப் புத்தாண்டு பரிசாக, சம்பள உயர்வை வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விப்ரோ நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள CEO தியேரி டெலாபோர்ட்டே தலைமையில் இந்நிறுவனம் கடந்த ஐந்து மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தையிலிருந்து அதிகளவிலான திட்டங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக விப்ரோ பங்குகள் சுமார் 70 % வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்த நிலையில் மீதமுள்ள 20 % ஊழியர்கள் அதாவது மிட் லெவல் C1 பேண்ட் முதல் அதற்கு மேல் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 2021 ஜூன் 1 முதல் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக விப்ரோ நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 2020-ல் விப்ரோ ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை.
தற்போது விப்ரோ ஊழியர்கள் அளித்த தகவல் படி இந்நிறுவனத்தின் ஆப்ஷோர் ஊழியர்களுக்கு 6 முதல் 8 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும், ஆன்சைட் ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விப்ரோ நிறுவன ஊழியர்கள் இந்தக் கொரோனா காலகட்டத்தில் சிறப்பான பணிகளைச் செய்து வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் கொண்டு சென்றதை அடுத்து விப்ரோ 2020-21 நிதியாண்டில் 3வது மற்றும் 4வது காலாண்டுக்கான வேரியபிள் பே-வை தனது ஊழியர்களின் 100 சதவீதம் முழுமையாகக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், டிசம்பர் 1-ம் தேதி வெளியான தகவல் படி விப்ரோ நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சுமார் 7000 ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 3 வருடத்தில் பதிவ உயர்வு கொடுக்கப்பட்ட எண்ணிக்கை இந்த வருடம் சற்று அதிகம் என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆபீஸ் வந்து எட்டிக்கூட பார்க்கல’... ‘அடுத்தடுத்த அதிரடியால், 5 மாதங்களில்’... ‘அசுர வளர்ச்சி காட்டிய இந்திய ஐடி நிறுவனத்தின் சிஇஓ’...!!!
- 'இன்று பல்லாயிரக் கணக்கான... இந்திய இளைஞர்களின் வாழ்வை மாற்றி அமைத்தவர்!'.. 'மிகப்பெரிய இழப்பு'!.. நொறுங்கிப் போன ஐடி ஊழியர்கள்!
- ‘எங்க போனாலும் இதையே சொல்றாங்க!.. ஆண்மகன் என சான்றிதழ் கொடுங்க!’.. ஐடி வேலையை இழந்த வாலிபர் கலெக்டருக்கு மனு!
- 'இந்த சீசனே நிலைமை ஒன்னும் சரியில்ல!!!'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு?!!'...
- 'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!
- ‘அடித்தது யோகம்!’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்!.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்!
- 'இனி நிரந்தரமாவே Work From Home தானா?!!'... 'புதிய தளர்வுகளால்'... 'IT, BPO ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'...
- 'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'...
- அடேங்கப்பா...! இது ஒரு வருஷத்தோட சம்பளம் இல்லையா...? ஒரு மாசத்துக்கே இவ்வளவு சம்பளமா...! - ராணியோட வீட்டு வேலையாளுக்கு வழங்கப்படும் 'அதிர' வைக்கும் சம்பளம்...!
- “ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்!”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு!.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்!