இட்லி மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.507 கோடி முதலீடு செய்த ‘Wipro’ நிறுவனர்.. அசர வைக்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தின் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அசீம் பிரேம்ஜி பெங்களூருவில் உள்ள இட்லி-தோசை மாவு தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான iD Fresh Food, தங்களது வர்த்தகத்தை இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அந்நிறுவனம் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு பிசி முஸ்தபா, அப்துல் நாசர் ஆகிய இரண்டு சகோதரர்கள் இணைந்து  iD Fresh Food என்ற சிறிய நிறுவனத்தை தொடங்கினர். தற்போது இது ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இட்லி-தோசை மாவு தயாரிப்பு விற்பனையை தொடங்கிய இந்நிறுவனம் தற்போது மலபார் பரோட்டா, கோதுமை பரோட்டா, பன்னீர், தயிர் வடை மாவு, கோதுமை ஃபிரட் பலவற்றை சொந்தமாக தயாரித்து இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

iD Fresh Food நிறுவனம் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளின் 45 நகரங்களில் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு புதிய முதலீட்டார்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசீம் பிரேம்ஜி iD Fresh Food நிறுவனத்தில் ரூ.507 கோடி முதலீடு செய்துள்ளார். நியூகுவெஸ்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த முதலீட்டை அவர் செய்துள்ளார்.

WIPRO, IDFRESHFOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்