தொழில் போட்டி.. கடன் சுமை.. இந்தியாவை விட்டு வெளியேறும் 'பிரபல' நிறுவனம்?
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றாலே வோடபோன், ஏர்டெல், ஜியோ இந்த மூன்றும் தான் மக்கள் மனதில் தோன்றும். அந்தளவு இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இந்த நிறுவனங்கள் பின்னி பிணைந்துள்ளன.
இந்தநிலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கடன் சுமை, வாடிக்கையாளர்கள் இழப்பு, ஜியோவின் போட்டி போன்ற காரணங்களால் வோடபோன் நிறுவனம் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த நேரத்திலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தொலைத்தொடர்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இதன்படி வோடபோன் ஐடியா நிறுவனம் 28,308 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு ஏற்கனவே நீடித்த கட்டணப் போர்களையும், அதிக கடன் சுமையையும் எதிர்த்துப் போராடும் சுமைகளை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
இதுதவிர ஐடியா நிறுவனத்தை இணைத்த வகையிலும் வோடபோன் நிறுவனத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். ஐடியா நிறுவனத்தை வாங்கியதற்காக இந்திய அரசுக்கு தகுந்த கட்டணங்களை வோடபோன் செலுத்தவில்லையாம். எல்லாவற்றுக்கும் மேலாக கடன்காரர்களின் நிலுவைத்தொகையையும் சரியாக செட்டில்மெண்ட் செய்யவில்லையாம்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தபோது எல்லாவற்றுக்கும் விரைவில் முடிவு கட்டப்படும் என்று வோடபோன் தெரிவித்ததாம். இது தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த தகவல் உண்மையா? என ஐஏஎன்எஸ் (IANS) செய்தி நிறுவனம் வோடபோனிடம் கேட்க, அதற்கு அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
'ரயிலுக்குள் பயணி செய்த காரியம்'.. அடுத்தடுத்து தீப்பிடித்த ரயில் பெட்டிகள்... 65 பேர் பலியான சோகம்!
தொடர்புடைய செய்திகள்
- ஜியோ, ஏர்டெல், வோடபோன் சண்டையால்.. 40 ஆயிரம் ஊழியர்கள்.. வீட்டுக்கு அனுப்பப்படலாம்!
- ‘ஜியோவ காப்பத்தனும்’... ‘புதிய டிஜிட்டல் சேவை’... 'ரிலையன்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு'!
- ‘155 ரூபாய்க்கு 28 GB'.. ‘185 ரூபாய்க்கு 56 GB'.. இன்னும் 2 புதிய ப்ளான்கள்..! அதிரடி காட்டிய ஜியோ..!
- வரம்பற்ற குரல் அழைப்புகள்.. தினசரி 1 ஜிபி டேட்டா.. 500 எஸ்எம்எஸ்.. 28 நாள் வேலிடிட்டி.. இவ்வளவும் 108 ரூபா தான்!
- 'தீபாவளி' அதிரடி.. அடுத்தடுத்து 'ஆபர்களை'.. அள்ளி 'வழங்கிய' ஜியோ.. விவரம் உள்ளே!
- 'இது லிஸ்ட்லயே இல்லயே!'.. அசரவைக்கும் ஜியோவின் ALL IN ONE ப்ளான் பத்தி தெரியுமா?
- சத்தம் இல்லாம.. 'ரெண்டு' திட்டங்களை 'தூக்குன' ஜியோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
- ‘ஒரு மாசத்துல மட்டும் இவ்ளோ பேரா..!’.. ஏர்டெல், வோடாஃபோனை பின்னுக்கு தள்ளிய ஜியோ..!
- ஒரு காலுக்கு '52 பைசா' நஷ்டம்.. ஏர்டெல், வோடபோன்-க்கு 'அபராதம்' போடுங்க.. 'கதறும்' ஜியோ!
- ‘மாசத்துக்கு 12 ரூபாய் தான்’.. ‘6 பைசா சர்ச்சை’ ஜியோ சொன்ன புது விளக்கம்..!