என்ன பெரிய பிட் காயின், 10 ரூபா காயின் தெரியுமா.. தடை போட்ட மாதிரி யாரும் வாங்க மாட்டாங்க.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் பிட்காயின் குறித்து பரவலாக பேசு பொருளாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவில் தனியார் கிரிப்டோகரன்ஸி முதலீட்டை தடை செய்ய உள்ளதாகவும், இதுதொடர்பாக வரும் குளிர்கால கூட்டத்தொடரில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே கிரிப்டோகரன்ஸி இந்தியாவில் தடை செய்யப்படமாட்டாது என்றும், அதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி முதலீடுக்கு தடையா அல்லது அனுமதியா, ரிசர்வ் வங்கியின் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்திருப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா, ரஷ்யா, மொராக்கோ, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோகரன்ஸி தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயத்தை பலரும் வாங்க யோசிப்பது குறித்தும் நெட்டிசன்கள் கிண்டலாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவியதில் இருந்து மக்கள் இந்த நாணயத்தை வாங்க அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தாலும் சில பகுதிகளில் இன்னமும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மக்கள் யோசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CRYPTOCURRENCIES

மற்ற செய்திகள்