"ட்விட்டரை இப்போதைக்கு வாங்கல".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் ட்வீட்.. காரணம் இதுதானா?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபல சமூக வலை தலமான ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 3 வருஷத்துக்கு அப்பறம் மறுபடியும் வந்திருச்சு.... இவ்ளோ எடையா? மிரள வைக்கும் மான்ஸ்டர் சுறா..

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.

அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

தற்காலிக முடிவு

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க்

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்,"ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்விட்டர் தளத்தில் உள்ள போலி கணக்குகளின் விபரங்களை அவர் திரட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

ELON MUSK, TWITTER, TWEETS, TWITTER DEAL TEMPORARILY ON HOLD SAYS ELON MUSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்