வேலையே போனாலும் ட்விட்டர் CEO-க்கு அடிக்கும் ஜாக்பாட்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றிய நிலையில் அதன் CEO பராக் அகர்வாலை மஸ்க் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில். அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் அவருக்கு கோடிக்கணக்கான தொகையை ட்விட்டர் நிறுவனம் கொடுக்க வேண்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
அதன்பின்னர் போலி கணக்குகள் குறித்த விபரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி அந்த டீலை நிரந்தரமாக கைவிட்டார் மஸ்க். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோரையும் மஸ்க் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ட்விட்டர் CEO பணிநீக்கம் செய்யப்பட்டாலும் அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் CEO-வாக இந்தியாவை சேர்ந்த அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், Equilar எனும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி பதவியேற்று ஒரு வருடத்திற்குள் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டில் ஊழியராக இணைந்தார் பராக் அகர்வால். அப்போது ட்விட்டரில் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 1000 மட்டுமே. மும்பை ஐஐடி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பராக் அகர்வால் 2017ஆம் ஆண்டில் ட்விட்டர் சிடிஓவாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ட்விட்டர் CEO பதவியில் இருந்து ஜாக் டார்சி விலகிய நிலையில் அகர்வால் புதிய CEO -ஆக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read | உலகின் அதிவேக வெர்டிகல் ரோலர் கோஸ்டர்.. கின்னஸ் சாதனை படைத்த துபாய்.. அசர வைக்கும் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தா வந்துட்டோம்ல... ட்விட்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த எலான் மஸ்க்.. அவர் தூக்கிட்டு வந்த பொருளை பத்திதான் உலகமே பேசுது.. வைரல் வீடியோ..!
- வெள்ளிக்கிழமை 5 மணி வரைதான் டைம் இருக்கு.. தீவிர முயற்சியில் எலான் மஸ்க்.. பரபர பின்னணி..!
- புயல் வேகமா-ல இருக்கு.. எலான் மஸ்க் போட்ட ஒரே ட்வீட்.. இது எப்படி சாத்தியம்னு திகைச்சுப் போன நெட்டிசன்கள்..!
- என் Perfume-அ வாங்குனாத்தான்.. எலான் மஸ்க் வச்ச டிமாண்ட்.. ஒரே ட்வீட்டில் பத்திகிட்ட ட்விட்டர்..!
- வாசனை திரவிய தொழிலில் கால்பதித்த எலான் மஸ்க்.. விலையை கேட்டு ஷாக் ஆகிப்போன நெட்டிசன்கள்..!
- "பணக்காரங்கனா எல்லோரும் அப்படித்தான் இருக்கணுமா?".. தன்னை விட்டு பிரிந்துபோன மகள் குறித்து எலான் மஸ்க் உருக்கம்.. முழு விபரம்..!
- எலான் மஸ்க்கின் Tweet-ல் இருந்த வார்த்தை.. உலகமே அத பத்திதான் பேசிட்டு இருக்கு... குஷியில் நெட்டிசன்கள்..!
- நெனச்சதை சாதிச்ச எலான் மஸ்க்.. முடிவிற்கு வரும் நீண்டநாள் போராட்டம்.. முழு விபரம்..!
- "உங்களை மாதிரி ஆகணும்.. சீக்ரட்டை சொல்லுங்க".. கேள்வி கேட்ட நெட்டிசன்.. ஒரே வார்த்தைல மஸ்க் கொடுத்த ரிப்ளை..!
- இப்படியா பண்றது?.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு.. நாசாவின் மெகா திட்டம்.. மஸ்க் பகிர்ந்த மீம்..!