அடேங்கப்பா ஒரு ‘சீட்’ இத்தனை கோடிக்கு ஏலமா..! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் நபர்.. மலைக்க வைக்கும் தொகை..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஜெஃப் பெஸோஸ் உடன் விண்வெளிக்கு பறப்பதற்காக நடத்தப்பட்ட ஏலத்தின் முடிவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா ஒரு ‘சீட்’ இத்தனை கோடிக்கு ஏலமா..! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் நபர்.. மலைக்க வைக்கும் தொகை..!

உலக முன்னணி கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனத்தின் தலைவருமான ‌ஜெஃப் பெஸோஸ், புளூ ஆரிஜின் (Blue Origin) என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், வரும் ஜூலை 20-ம் தேதி தனது முதல் விண்வெளி பயணமான நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது.

Trip to space with Jeff Bezos sells for 28 million dollars

இந்த முதல் பயணத்தில் ஜெஃப் பெஸோஸ் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். இவர்களுடன் மேலும் ஒருவர் பயணிக்கலாம் என்பதால், அந்த ஒரு இருக்கையை புளூ ஆரிஜின் நிறுவனம் ஏலம் விட்டது. சுமார் 140 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு மாத காலமாக நடந்த ஏலத்தில் 5 மில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36 கோடியே 61 லட்சம்) குறைவாகவே ஏலம் கேட்கப்பட்டது.

Trip to space with Jeff Bezos sells for 28 million dollars

இந்த நிலையில், ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த தொகை 5 மடங்காக உயர்ந்தது. அதன்படி, ஜெஃப் பெஸோஸுடன் விண்வெளிக்கு பயணிப்பதற்கான இருக்கையை ஒருவர் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.205 கோடி) ஏலம் கேட்டார். அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காத நிலையில், அந்த இருக்கையை அவருக்கு புளூ ஆரிஜின் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஆனால், ஏலம் எடுத்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்