ட்விட்டரில் Blue Tick -க்கு பணம் கட்டணுமா?.. வெடித்த சர்ச்சை.. எலான் மஸ்க் கொடுத்த பரபர பதில்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து பல பரபரப்பான தகவல்கள் தினந்தோறும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | 5 நாளைக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்.. முழு விபரம்..!

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வகையில் ட்விட்டரில் verified badge எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு பயனர்கள் பணம் (20 டாலர்கள்) செலுத்தவேண்டும் என தகவல்கள் வெளியானது. இது இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் கிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மஸ்க்,"நாங்களும் பில்களை செலுத்தவேண்டும். விளம்பரதாரர்களை மட்டுமே ட்விட்டர் நிறுவனம் நம்பி இருக்க முடியாது. 8 டாலர் ஓக்கேவா?" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அடுத்த ட்வீட்டில்,"இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன், நான் நீண்ட விளக்கத்தை அளிக்க இருக்கிறேன். bots மற்றும் ட்ரோல்களை தோற்கடிக்க இதுவே ஒரே வழி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | ஆன்லைனில் பழக்கம்.. இளம்பெண்ணுடன் லாட்ஜில் தங்கிய 52 வயசு நபர்.. அடுத்தநாள் காலியாக கிடந்த நகைப்பை.. கன்னியாகுமரியில் பரபரப்பு..!

ELON MUSK, TWITTER, BLUE TICK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்