நஷ்டம்,நஷ்டம்னு சொல்லிட்டு.. லாபத்தில்.. ஜியோ, வோடபோனை.. பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்திய நெட்வொர்க் நிறுவனங்களின் காலாண்டு வருவாய் விவரங்களைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் நெட்வொர்க் நிறுவனங்கள் மொத்தமாக ரூ.54,218 கோடி வருவாய் ஈட்டியுள்ளன.

இதில் ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி அதிகமாக சம்பாதித்துள்ளது. இதில் ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 19,061 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இதில் ரூபாய் 851.3 கோடியை உரிமங்களுக்கான கட்டணமாகவும், ரூபாய் 309.33 கோடியை ஸ்பெக்ட்ரம் உரிமைகளுக்கான கட்டணமாகவும் ஏர்டெல் அரசுக்கு செலுத்தியுள்ளது. மொத்தமாக 1,160.63 கோடி இந்த நிறுவனத்தால் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக வோடபோன் ஐடியா நிறுவனம் 15,988.49 கோடி ரூபாயை வருமானமாகவும், ஜியோ நிறுவனம் 15,945.62 கோடியை வருமானமாகவும் ஈட்டியுள்ளது. இதில் 1,372.72 கோடி ரூபாயை ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்களுக்கான கட்டணமாக அரசுக்கு ஜியோ செலுத்தியுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 3,222.91 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக ஈட்டியுள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்களுக்கான கட்டணமாக 207.96 கோடி ரூபாயை அரசுக்கு அந்நிறுவனம் செலுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்