‘இந்த ரயில் காலதாமதமானால்’... ‘பயணிகளுக்கு இழப்பீடு’... 'ஐஆர்சிடிசி புதிய திட்டம்'!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராவிட்டால், ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் முதன்முறையாக தேஜஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரயில்வேத் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரயில்வேயின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி, முதன்முறையாக டெல்லி - லக்னோ மற்றும் மும்பை - அகமதாபாத் இடையே அதிவேகத்தில் தேஜஸ் ரயில்களை இயக்க உள்ளது. அந்த வகையில் டெல்லி - லக்னோ இடையே வரும் 4-ம் தேதி, தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதுபோன்ற அதிவேக ரயில்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் கால தாமதம் ஏற்படுவதாக, பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, தனியார் மயமாக்கலின் முன்மாதிரி திட்டமாக, தேஜஸ் ரயிலில், ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் 100 ரூபாயும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் 250 ரூபாயும், பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதனை ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. மேலும் தேஜஸ் ரயிலில் பயணிக்கும்போது, பயணிகள் உயிரிழக்க நேர்ந்தாலோ அல்லது விபத்தினை எதிர்கொள்ள நேர்ந்தால், 25 லட்சம் ரூபாய் காப்பீடும், உடைமைகள் திருட்டு போனால் 1 லட்சம் ரூபாய் காப்பீடும் வழங்க இருக்கிறது.

ரயில்களின் கால தாமதத்திற்கு இழப்பீடு வழங்கும் முறைகள், ஏற்கனவே ஜப்பான் நாட்டிலும், பாரிஸ் நகரத்திலும், இங்கிலாந்திலும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TRAIN, DELAY, TEJAS, EXPRESS, RAILWAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்