முன்னாடி எலான் மஸ்க்.. இப்போ மார்க் சக்கர்பர்க்.. அடுத்தடுத்து வச்ச டார்கெட்..19 வயசு ஹேக்கரால் வந்த புதிய சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் ஜெட் விமானம் குறித்த தகவல்களை வெளியிட்ட 19 வயதே ஆன மாணவர் ஒருவர் தற்போது மார்க் சக்கர்பெர்க்கின் விமானம் குறித்த தகவல்களை திரட்டி இருப்பதாக அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Breaking: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு 1 ஆண்டு சிறை.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

ஜெட்

தொழில்துறை, ஆராய்ச்சி, முதலீடு என இயங்கிவரும் மஸ்க் சொந்தமாக ஜெட் விமானம் ஒன்றை வைத்திருக்கிறார். டஸால்ட் ஃபால்கான் 900பி (Dassault Falcon 900B) என்னும் இந்த ஜெட்டை தன்னுடைய சொந்த பயணங்களுக்கு பயன்படுத்திவந்தார் மஸ்க். இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜாக் ஸ்வீனி என்னும் மாணவர் எலான் மஸ்க்கின் ஜெட் விமானத்தின் இயக்கம் குறித்த தகவல்களை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதாவது, மஸ்கின் Falcon 900B ஜெட் தற்போது எங்கே இருக்கிறது? அடுத்து எங்கே செல்லும்? எந்த விமான நிலையத்தில் எத்தனை மணி நேரம் நிற்கும் என அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் டிவிட்டரில் பதிவிட துவங்கியுள்ளார்.

டீல்

இந்த விஷயத்தை அறிந்த மஸ்க், இந்த தகவல்களை நீக்குமாறு ஜாக்கிற்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். டிவிட்டரில் இருந்து தன்னுடைய ஜெட் விமானம் குறித்த தகவல்களை நீக்க, 5000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும் மஸ்க் தனது மெசேஜில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஜாக் வைத்த கோரிக்கை வேறுவிதமாக இருந்தது.

எலான் மஸ்கிடம் 3 கோரிக்கைகளை வைத்திருந்தார் 19 வயதான ஜாக். தனக்கு 50,000 டாலர்கள் வழங்கவேண்டும். அவரது நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் பயில வாய்ப்பு வழங்கவேண்டும் அல்லது டெஸ்லா காரை வழங்க வேண்டும் என டீல் பேசியிருக்கிறார் ஜாக்.

மார்க் சக்கர்பெர்க்

இந்நிலையில், மெட்டா குழுமத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க்கிற்கு சொந்தமான N68885 ஜெட் குறித்த தகவல்களை சேகரித்திருப்பதாக ஜாக் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஜாக்பாட் அடித்திருக்கிறது. மார்க் சக்கர்பெர்க்-ன் ஜெட் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. பல பயணங்கள் அது அவருடையதுதான் என சுட்டிக்காட்டுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் மார்க் இந்த விமானத்தை உபயோகிக்கவில்லை எனவும், இருப்பினும் இந்த தகவல்களின் அடிப்படையில் மார்க் பயணங்களுக்கு இடையேயான தொடர்பு குறித்து ஆய்வு செய்துவருவதாகவும் ஜாக் தெரிவித்திருக்கிறார்.

எலான் மஸ்கின் ஜெட் குறித்த தகவல்களை வெளியிட்ட, ஜாக் தற்போது மார்க் சக்கர்பெர்க் உடைய ஜெட் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

ELON MUSK, MARK ZUCKERBERG, NEW AIRCRAFT, எலான் மஸ்க், மார்க் சக்கர்பர்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்